எனது வாழ்க்கையின் “சூப்பர் ஹீரோ” என்றும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தான் என்று வீராட் கோஹ்லி தெரிவித்தார்.
இந்திய அணியின் இளம் வீரர் கோஹ்லி, 24. இதுவரை 108 ஒரு நாள் (4378 ஓட்டங்கள்), 18 டெஸ்ட் (1175) போட்டியில் பங்கேற்றுள்ளார். 2008ல் இவரது தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, உலகக் கிண்ணத்தை (50 ஓவர்) வென்றது.
2011ல் இந்தியா, சொந்த மண்ணில் உலகக் கிண்ணம்(50 ஓவர்) வென்ற போதும், அணியில் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளில் முடிந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில், காயமடைந்த டோனிக்கு பதில் அணித்தலைவராக செயல்பட்டு இந்திய அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றார். ஜூலை 24ம் திகதி தொடங்கும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். விளம்பர உலகில் முன்னணியில் உள்ள இவர், மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று கூறுகையில், கிரிக்கெட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் எனது “சூப்பர் ஹீரோ” மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தான்.
கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை இதற்கு மதிப்பு கொடுத்து விளையாடினால் அவர் தான் “ஹீரோ”. இதை களங்கப்படுத்த முயற்சிப்பவர் வில்லன் ஆகிவிடுவர். இவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். கிரிக்கெட் மட்டை என்பது வெறும் விளையாட்டு பொம்மை அல்ல. இது ஒரு ஆயுதம். இது தான் எனது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கிறது. மைதானத்தில் இதை வைத்து எப்படி வேண்டுமானாலும் அசத்த உதவுகிறது.
ஜிம்பாப்வே தொடரில் இளம் வீரர்கள் இருப்பது ஒரு பிரச்னை அல்ல. ஒருநாள், டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, 11 வீரர்கள் இருந்தால் போதுமானது. கடுமையாக போராடினால் வெற்றி கிடைக்கும். இப்போது தெரிவு செய்யப்பட்ட 15 வீரர்களுமே திறமையானவர்கள் தான்.
கடந்த சில மாதங்களாக இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது என்றும் ஒருவேளை இது தொடரும் பட்சத்தில், இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல காலம் தான் எனவும் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !