விளையாட்டுகளில் வெற்றி பெற 'வயாகரா' மாத்திரைகளை பயன்படுத்துங்கள் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உலகளாவிய அளவில் உள்ள மாணவர்கள் பங்கேற்ற சர்வதேச மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகள் கசான் நகரில் நடைபெற்றன. இந்த போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்த ஜப்பான் மாணவர்கள் 24 பதக்கங்களையும் இரண்டாம் இடம் பிடித்த சீன மாணவர்கள் 26 பதக்கங்களையும் வென்றனர்.
155 தங்கப் பதக்கங்களை வென்று ரஷ்ய மாணவர்கள் முதல் இடத்தை கைப்பற்றினர். எனினும், ரஷ்ய மாணவர்கள் இன்னும் சிறப்பாக விளையாடி அதிக பதக்கங்களை வென்றிருக்கலாம் என ரஷ்ய ஊடகங்கள் அதிருப்தி தெரிவித்திருந்தன.
இந்நிலையில், பதக்கம் வென்ற ரஷ்ய மாணவர்களுக்கு தலைநகர் மாஸ்கோ அருகே பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், 'இதைப் போன்ற மிகப்பெரிய வெற்றிகளை நாம் பெற்றிருந்தாலும், சிலர் நம்மை குறை கூறி வருவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களும் இதைப்போன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூற விரும்புகிறேன்.
உடல் நல குறைபாடு ஏதுமிருந்தால் டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளட்டும். 'வயாகரா' சாப்பிடுவது கூட அவர்களுக்கு நல்ல பலனைத் தரும்' என்று கூறினார். ரஷ்ய அதிபரின் இந்த பேச்சு எதிர்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் நபர் இதைப்போன்ற பொறுப்பற்ற வகையில் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !