பத்திரிக்கை ஒன்றிக்கு அவர் அளித்த பேட்டியில், விஜய் கூல் ஆனவர், அஜீத் உண்மையானவர் என்று கூறியுள்ளார்.
மேலும், என்னுடைய பார்வையில் விஜய்க்கு ஏற்ற ஜோடி அசின் தான். விஜய்க்கு கேசுவல் டிரஸ் நன்றாக இருக்கும். அவரிடம் எனக்கு பிடித்ததே அவர் தன்னுடன் பணிபுரிபவர்களை ரிலாக்சாக பீல் பண்ண வைப்பது தான், என்று கூறியுள்ளார். மேலும், அஜீத்துக்கு ஏற்ற ஜோடி நயன்தாரா தான். அவருக்கு வேட்டி, சட்டை தான் பெருத்தமான உடை. அவர் உண்மையானவர். தன்னுடன் பணிபுரிபவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்.
ஒருவரிடம் நன்றாக பழகி விட்டால், அவர்களுக்கு தேவையான உதவிகளை முன் வந்து செய்வார் என்று கூறியிருக்கிறார்.
விஜய்க்கு எதிராக தமிழக அரசு:
விஜய் நடித்து முடித்துள்ள படம் தலைவா. அமலாபால், ஹீரோயின். மும்பை தமிழர்களுக்காக போராடும் தலைவனின் கதை. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடி. வருகிற 9ந் திகதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டார்கள்.போஸ்டர்களும் அடித்து குவித்து விட்டார்கள். டி.வி. எப்.எம். பத்திரிகை அனைத்திலும் விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்து விட்டார்கள். படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கி இருக்கும் வேந்தர் மூவீஸ் விளம்பரத்துக்காக மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க தலைவா படத்திற்கு தணிக்கை குழு யு சான்று கொடுத்ததாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை. இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைமையிலான படக்குழுவினர் விஜய் படம்தானே தணிக்கை குழு தாராளமாக யு சான்றிதழ் தந்து விடும் என்று அபாரமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிலைமை தலைகீழானது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி ஏ கொடுக்க முடிவு செய்தனர்.
தயாரிப்பாளர், இயக்குனர் அனைவரும் வாதாடியதால் கடைசியில் தணிக்கை குழுவினர் யு/ஏ கொடுக்க முன்வந்தனர். ஆனால் படக்கு குழுவினர் யு தான் வேண்டும் என்று பிடிவாதமாக சொன்னார்கள். அதனை ஏற்க தணிக்கை குழு மறுத்துவிட்டது. சில காட்சிகளை நீக்கினால் யு தருவாதாக சொன்னார்கள். அந்தக் சீன்கள்தான் படத்தில் முக்கியமானது கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்டது.
இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். அங்கும் யு/ஏ உறுதி செய்யப்பட்டால் மும்பையில் மறு தணிக்கை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். யு/ஏ சான்றிதழுடன் படம் வெளிவந்தால் வரிவிலக்கு கிடைக்காது. இதனால் தயாரிப்பாளருக்கு வரவேண்டிய கோடிக் கணக்கான ரூபாய் அரசுக்கு வரியாகச் சென்று விடும். வரிவிலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த வருமானத்தையும் சேர்த்துதான் வேந்தர் மூவீஸ் பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கி உள்ளது. ஒரு வேளை வரிவிலக்கு கிடைக்காவிட்டால் கொடுத்த பணத்தின் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும் என்று வேந்தர் மூவீஸ் கோரலாம். அதனால்தான் யு வாங்கியே தீருவது என்ற தயாரிப்பு தரப்பு உறுதியாக இருக்கிறது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகவும் வாய்ப்பிருக்கிறது.
சமீப காலமா தமிழக அரசு விஜய்க்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்றும், விமானநிலையம் அருகே நடைபெற இருந்த பிரமாண்ட ரசிகர் மன்ற விழாவுக்கு தடைவிதித்தது.
இப்போது தலைவா படத்துக்கு தொல்லை தருகிறது என்றும் விஜய் தரப்பு கருதுகிறது. எது எப்படி இருந்தாலும் அறிவித்த திகதிக்குள் படத்தை வெளியிட்டு விடுஙங்கள் என்று விஜய் கூறியிருக்கிறாராம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !