டெல்லியில் கடந்தாண்டு டிசம்பரில் ஓடும் பஸ்சில் ஆறு பேர் அடங்கிய கும்பலால் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றில் நடக்கிறது.
நேற்றைய விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் 15 வயது சிறுவன் சாட்சியாக ஆஜர் படுத்தப்பட்டான்.
அந்த சிறுவன், ‘’பாலியல் பலாத்கார சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்றிரவு குற்றம் சாட்டப்பட்டுள்ள வினய், பவன் ஆகியோர் அந்த பஸ்சில் இல்லை. சம்பவம் நடந்தாக கூறப்படும் அதே நேரத்தில் அவர்கள் இருவரும் தெற்கு டில்லியில் உள்ள ஒரு பூங்காவில் நடந்த இசைக் கச்சேரியை பார்த்து கொண்டிருந்தனர் என, சாட்சியம் அளித்தான்.
இது தொடர்பாக ஒரு வீடியோ ஆதாரத்தையும் அந்த சிறுவன் நீதிமன்றில் தாக்கல் செய்தான். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தயான் கிருஷ்ணன் இதை மறுத்தார். அவர் வாதிடுகையில், ‘’சம்பவத்தன்று தெற்கு டில்லி பூங்காவில் எந்த இசைக் கச்சேரியும் நடக்கவில்லை. இந்த சிறுவனின் குடும்பத்தினர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நண்பர்கள்.
இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக, பொய் சாட்சி கூறப்படுகிறது’’ என, மறுத்தார்.
சிறுவனின் சாட்சியத்தால் நிதிமன்றில் பரபரப்பு ஏற்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !