பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகள், தங்களது ஆதிக்கம் இருக்கும் பகுதிகளில் சில துண்டறிக்கைகளை விநியோகம் செய்தனர். அதில் பெண்களும் ஆண்களும் உடலை கவர்ச்சியாக காட்டும் வகையில் இறுக்கமான மற்றும் மெல்லிய வகை ஆடைகளை அணிய கூடாது.
ஜீன்ஸ் அணிய கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு உடை அணிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
தலிபான்கள் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில், ‘நாங்கள் இது போன்ற ஆடைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். அதேபோல் இறுக்கமான மற்றும் மெல்லிய ஆடைகளை தைத்து தரும் டெய்லர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இறுக்கமான ஆடைகளை விற்பவர்கள் மற்றும் தைத்து கொடுப்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று தலிபான்கள் கூறி உள்ளனர். ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவ்வாறு குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படுவதால் இந்த மாதம் முழுவதும் இறுக்கமான, கவர்ச்சியான ஆடைகள் அணிய கூடாது என்று தடை விதித்துள்ளதாக கூறுகின்றனர். ரம்ஜான் மாதத்தில் நோன்பு கடை பிடிக்காதவர்களுக்கும் ஒரு மாத சிறை தண்டனை வழங்கப்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தெற்கு வசிரிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிரியாவை மையமாக கொண்டு இயங்கி வரும் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளில் முல்லா நஷீர் தலிபான் குழுவினர்தான் இந்த மிரட்டல் விடுத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !