வெளிநாடுகளிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து பலரிடம் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கடவத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த 16 பேர் இவ்வாறான பண மோசடி தொடர்பில் கடவத்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர்கள் அமெரிக்கா, கனடா, ஜேர்மன் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து 35 லட்சம் ரூபா பண மோசடி செய்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது கடவத்த பிரதேசத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளைக் கொண்டு பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது தாய் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரது வீட்டிலிருந்து ஒருதொகை பணம் மற்றும் வெளிநாடு செல்வதற்காக ஆவணங்கள் பலவும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மகர நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன்படி எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !