35 ஆண்டுகளுக்கு முன்பு தன் மீது இனவெறி தாக்கு தல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
அமெரிக்காவில் புளோரிடாவில் டிரேவன் மார்டின் (17) என்ற கறுப்பர் இன வாலிபர் ஷிம்மர்மேன் என்ற வெள்ளைக்கார காவலாளியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து நடந்த வழக்கில் ஷிம்மர்மேன் விடுதலை செய்யப்பட்டார். இனவெறி தாக்குதல் காரணமாக கறுப்பர் இன வாலிபரை கொன்ற வெள்ளைக்காரர் விடுதலை செய்யப்பட்டார் என்ற தகவல் பரவியது. இதனால் நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களில் கலவரம் ஏற்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவிக்க அதிபர் ஒபாமா நேற்று திடீரென வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
”கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு டிரேவன் போன்று நானும் இனவெறிக்கு தாக்குதலுக்கு ஆளானேன். இருந்தாலும், தற்போது புளோரிடா கோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள இந்த கிளர்ச்சி அமெரிக்கர்களிடையே உள்ள நல்லுறவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
எனவே, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இப்பிரச்சினையை சட்டத்தின் மூலமே அணுக வேண்டும். மக்களின் இப்போராட்டத்தால் டிரேவனின் மரணம் அவமரியாதைக்குள்ளாகிவிடும்” என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !