மேலும் துவங்கும் தொழிலில் அதிகப்படியான அறிவும், ஆர்வமும் தேவை, இவை இரண்டும் தான் வெற்றிக்கான பதைக்கு வழி வகுக்கும். மேலும் இக்காலத்து இளைஞர்கள் விரும்பும் நாவல் ஆசிரியர் சேதன் பகத் "இந்தியா கனவுகளுக்கான இடம் இல்லை" என்று ஒரு நாவலில் கூறினார். அவர் சொல்வது சரி தானே, நம் இந்தியாவில் புதிதாக எதேனும் செய்ய துவங்கினால், தலையில் தட்டி முலையில் உட்கார வைக்க அனைவரும் ரெடி. ஆனால் அதனை ஆதரிக்கும் மக்கள் மிகவும் குறைவே. இத்தகைய நிலையில் பல வேதனைகளையும், தடைகற்கலையும் தாண்டி சாதனைப் புரியும் இந்தியர்களுக்கு ஒரு சல்யூட்.
இந்த வரிசையில் இந்தியாவின் டாப் 10 இடங்களை பிடித்த பணக்காரர்களை இப்பொழுது பார்ப்போம்.
முகேஷ் அம்பானி:
முகேஷ் அம்பானியின் சொத்தின் மதிப்பு சமார் 22,600 பில்லியன் டாலர் ஆகும். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரகவும், நிர்வாக இயக்குநரகவும் பொறுப்பு வகிக்கின்றனர். அனைவரும் வியக்கும் வண்ணம் மும்பையில் இருக்கும் இவரது வீட்டின் (அன்டிலா) மதிப்பு மட்டும் 50-70 மில்லியன் டாலர்.
லட்சுமி மிட்டல்:
இவரது சொத்து மதிப்பு 19,200 பில்லியன் டாலர், இவர் எசெலார் மிட்டல் என்னும் மிகப்பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைவரகவும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பு வகிக்கின்றனர். இவர் கல்கத்தாவில் இருக்கும் செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார்.

இவரது சொத்து மதிப்பு 13,000 பில்லியன் டாலர், பெங்களூரை தலைமையகமாக கொண்டு உலக முழுவதும் விரிந்து இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கின்றனர். இவர் தனது 2 பில்லியன் டாலர் அளவு சொத்துக்களை தனது அறக்கட்டளையின் மூலம் நன்கொடையாக கொடுத்துள்ளார்.
சசி மற்றும் ரவி ருயா:
இவர்களின் சொத்து மதிப்பு 10,200 பில்லியன் டாலர். இவர்கள் எஸ்ஸார் நிறுவனத்தின் தலைவர்களாக உள்ளனர், ரவி ருயா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர்.
சாவித்ரி ஜிந்தால்:
இவரது சொத்து மதிப்பு 9,500 பில்லியன் டாலர், இவர் ஜிந்தால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
சுனில் மிட்டல்:
சுனில் மிட்டலின் சொத்து மதிப்பு சுமார் 8,800 பில்லியன் டாலர் ஆகும். உலகின் ஐந்தாம் மிக பெரிய தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெலின் உரிமையாளர் இவர்.
கெளதம் ஆதானி கெளதம்:
ஆதானியின் சொத்து மதிப்பு 8,200 பில்லியன் டாலர் ஆகும். இவர் இந்தியவின் முன்னணி வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ஆதானி குருப் நிறுவனத்தின் தலைவர்.
குமார் மங்கலம் பிர்லா:
இவரது சொத்து மதிப்பு 7,700 பில்லியன் டாலர் ஆகும். மேலும் இவர் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் ஆவார். ஆதித்யா பிர்லா குழுமம் உலகத்தில் சிமெண்ட் மற்றும் அலுமினிய உற்பத்தில் பெரும் பங்கை வகிக்கின்றது. இவர் பிர்லா குடும்பத்தின் நான்காம் தலைமுறை.

பலோன்ஜி மிஸ்ட்ரியின் சொத்து மதிப்பு 7,600 பில்லியன் டாலர். பலோன்ஜி மிஸ்ட்ரி, ஷப்புர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர். ஷப்புர்ஜி பலோன்ஜி குழுமம், இந்தியாவின் கட்டுமான துறையின் முன்னணி நிறுவனம்.
ஆதி கோத்ரேஜ்:
ஆதி கோத்ரேஜின் சொத்து மதிப்பு 6,800 பில்லியன் டாலர். கோத்ரேஜ் குழுமம் 114 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் ஆதி கோத்ரேஜ்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !