நியூசிலாந்தல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
வெலிங்டனுக்கு தெற்கு தென் மேற்கில் கடலில் 14 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 6.5 ரிக்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி அபாய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.5 அளவிலான 2வது நிலநடுக்கமும், அடுத்து 5.8 ரிக்டர் அளவில் 3வது நிலநடுக்கமும் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !