மேல் மாகாணத்தில் கோப்பி விரியன் பாம்பு (Hump Nosed Vipers) கடிகளுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசிய மென இலங்கையின் முன்னணி விலங்கியல் நிபுணர் என்ஸ்லம் டி சில்வா கேட்டுள்ளார்.
கோப்பி விரியன் பாம்புக்கடியினால் மேல் மாகாணத்தைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக தேசிய நச்சு நிலையம் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே விரியன் பாம்புகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கிராம புறங்களையே பெரும்பாலும் தமது வசிப்பிடமாகக் கொண்டுள்ள விரியன் பாம்புகள் அநேகமாக கோப்பித் தோட்டங்களில் கோப்பி இலைகளின் மேல் சுருண்டு காணப்படும். தூர இடங்களிலிருந்து வரக்கூடிய காய்கறிகள், பழங்கள், விறகு, பூச்சாடிகள், வாழை இலைகள், வாழைக் குலைகள், மரக் கட்டைகள் ஆகியவற்றுடன் இவை வருவதால் மேல் மாகாணத்தில் இப்பாம்பு களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவை நேரடியாக குட்டிகளை ஈனு பவை. சாதாரணமாக ஒரு கோப்பி விரியன் ஆகக்கூடியது 10 விரியன் குட்டி களை ஈனும். இருப்பினும் அண்மையில் ஒரு விரியன் 30 குட்டிகளை ஈன்று சாதனை நிலைநாட்டியுள்ளது. குட்டிகள் சுமார் ஒரு வார காலத்தில் சுயாதீனமாக இயங்கும் தன்மை கொண்டவை. அத்துடன் ஆண் கோப்பி விரியன்களைப் பார்க்கிலும் பெண் கோப்பி விரியன்களே அதிகமாக காணப்படுவதால் இனப்பெருக்கத் தன்மை அதிகமாகும். கோப்பி விரியன்கள் சுமார் 30 தொடக் கம் 60 சென்ரி மீற்றர் வரையான நீளம் கொண்டவை. இவை விழுந்த இலைகள், குப்பைக்கூளங்களுடன் சுருண்டு காணப் படுவதனால் இலகுவில் அடையாளம் கண்டு கொள்வது கடினமாகும்.
அதிக நச்சுத்தன்மை கொண்ட கோப்பி விரியன்கள் மனிதர்களை மட்டுமன்றி தவளை, எலி, பறவைகள், நாய், பூனை, கோழி போன்ற பிராணிகளையும் தீண்டக்கூடியவை.
கண்ணாடி விரியன்களுடன் ஒப்பிடுகை யில் கோப்பி விரியன் தீண்டுவதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவான போதும் இதனால் உடம்பிற்குள் செல்லும் விஷயம் நேரடியாக சிறுநீரகங்களை தாக்கிவிடும். எனவே, பாம்பு தீண்டியதாக அறியப்பெற்ற அடுத்த கணமே வைத்தியரை நாடி முறையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் வலி மற்றும் தீண்டப்பட்ட இடத்தில் ஏற்படும் வீக்கம் குறைவதற்கு சில நாட்கள் எடுக்க கூடும். கண்ணாடி விரியன்கள் தீண்டுவதனால் 40 சதவீதமானவர்கள் உயிரிழக்க கூடிய சந்தர்ப்பத்தில் கோப்பி விரியன்களால் 02 சதவீதமானவர்கள் மாத்திரமே உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கோப்பி விரியன்கள் உணர் திறன் மிக்கவை ஆகையினால் இரத்தம் சுவைப்பதற்காக பிராணிகள் இருக்கும் இடங்களை தேடி வரக்கூடியவை.
விரியன் இலங்கைக்கு மட்டுமே உரிய தனித்துவமான பிராணியாகும். இலங்கையில் இதன் நான்கு வகைகளை காண முடியும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !