கணவனால் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட பெண் ஒருவர், கனடாவில் தற்போதும் வாழ்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, தற்போது 77 வயதாகும் குறித்த பெண் அவருடைய கணவரால் கொலை செய்பட்டுள்ளதாக நம்பிய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதேவேளை 1961ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவர் முன்னர் வசித்து வந்த இடமான கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்திலுள்ள சுரே எனும் பகுதியில் இறுதியாக அயலவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் 50 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது கனடாவின் யூகோன் பகுதியில் வசித்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். எனினும் இவரின் கணவர் மர்வின் 1990 ஆண்டில் மரணமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !