Headlines News :
Home » » இறந்த மகனுடன் 4 நாட்கள் வாழ்ந்த வயது முதிர்ந்த தந்தை!

இறந்த மகனுடன் 4 நாட்கள் வாழ்ந்த வயது முதிர்ந்த தந்தை!

Written By TamilDiscovery on Tuesday, July 23, 2013 | 12:02 AM

இறந்த மகனுடன் 4 நாட்கள் வாழ்ந்த தந்தையால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 35). இவரது தந்தை புருஷோத்தமன்(வயது 85).

மகேந்திரன் கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார், மகேந்திரனின் தந்தைக்கு கண்பார்வை தெரியாது, வாய் பேசவும் மற்றும் நடக்கவும் முடியாது. எனவே திருமணம் ஆகாத தனது மகனுடன் அவர் வாங்கி கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு படுக்கையிலேயே இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மகேந்திரன் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அதன் பின்பு தூங்கிய அவர் படுக்கையிலேயே மரணமடைந்தார்.

இந்நிலையில் மகன் இறந்தது தெரியாத புருஷோத்தமன் மகனின் பிணத்துடன் இருந்துள்ளார். இவருக்கு உணவு வாங்கிக் கொடுக்காததால் மகன் வெளியூருக்கு சென்றிருப்பான் என்று நினைத்து 4 நாட்கள் மகனின் பிணத்துடனேயே பொழுதை கழித்துள்ளார்.

இந்நிலையில் அந்த அறையில் துர்நாற்றம் அதிகமாக வீசவே, புருஷோத்தமன் மெதுவாக நகர்ந்து சென்று மாடியில் இருந்து கீழ் வீட்டுக்கு வந்து சைகை செய்துள்ளார். கீழ் வீட்டில் வசித்தவர்கள் மாடிக்கு சென்று பார்த்த போது தான், மகேந்திரன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து செம்மஞ்சேரி பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த பொலிசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 4 நாட்களாக சாப்பிடாததால் மயக்க நிலையில் இருந்த புருஷோத்தமன், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template