சைபர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகின் முதனிலை வைரஸ் எதிர் கணனி மென்பொருள் உற்பத்தி நிறுவனமான கெஸ்பர்ஸ்கை நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கணனி பயனர்கள் அதிகளவில் சைபர் தாக்குதல்களுக்கு இலக்காவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சைபர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய உலக தர வரிசையில் இலங்கை எட்டாம் இடத்தை வகிக்கின்றது.
51 வீதமான கணனிப் பயனர்கள் சைபர் தாக்குதல்களினால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 15 வீதமான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !