ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சி இடம்பெற்று மலையாளப் படத்துக்கு சென்சார் அனுமதி வழங்கினாலும் அந்தப் படத்துக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடரும்.
ரிலீசாக விடமாட்டோம் என கேரள பெண்கள் அமைப்புகள் எதிர்பிபு தெரிவித்துள்ளன. தமிழ், மலையாளத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடிக்கும் அவர், தற்போது மலையாளத்தில் ‘களிமண்ணு' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை மலையாள இயக்குனர் பிளஸ்சி இயக்குகிறார். பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்வேதா மேனன் கர்ப்பமாக இருந்தார். படத்தில் இடம் பெறும் ஒரு பிரசவக் காட்சியை தத்ரூபமாக படமாக்க இயக்குநர் விரும்பினார். எனவே ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சியை படமாக்க முடிவு செய்தார். இதற்கு சுவேதா மேனனும் சம்மதித்தார்.
அதன்படி, ஸ்வேதா மேனனின் பிரசவத்தின்போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்து தத்ரூபமாக அக்காட்சி படமாக்கப்பட்டது. நிஜ பிரசவ காட்சியை படமாக்கியதற்கு கேரளாவில் பெண்கள் அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. படத்தில் இருந்து அக்காட்சியை நீக்கவேண்டும். இல்லையென்றால் படம் வெளியாகும்போது போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர்.
இந்நிலையில், இப்படத்தை சென்சார் குழுவுக்கு திரையிட்டு காட்டினர். படத்தை பார்த்த சென்சார் குழு, யு/ஏ சானறிதழ் வழங்கியது. வரும் ஆகஸ்ட் 23ம் தேதி படம் வெளியாகிறது.
பெண்கள் அமைப்புகள் போராட்ட அறிவிப்பு ஏற்கெனவே இந்தப் படத்துக்காக ஒட்டப்பட்ட ஸ்வேதா மேனனின் கர்ப்பமான வயிற்றைக் காட்டும் போஸ்டர்களை எதிர்த்த பெண்கள் அமைப்புகள், இப்போது ஸ்வேதா மேனன் பிரசவக் காட்சிகளுக்கு சென்சார் அனுமதி வழங்கியதை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளன. படம் வெளியாவதற்கு முன் இந்த போராட்டம் நடக்கும் என அறிவித்துள்ளன.
கேரள சபாநாயகர் கார்த்திகேயன் இந்தப் படத்தை எதிர்த்துப் பேசியது நினைவிருக்கலாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !