Headlines News :
Home » » எகிப்து முன்னாள் ஜனாதிபதி கடத்தப்பட்டார்: மகள் ஷாஸ்மா!

எகிப்து முன்னாள் ஜனாதிபதி கடத்தப்பட்டார்: மகள் ஷாஸ்மா!

Written By TamilDiscovery on Tuesday, July 23, 2013 | 8:19 AM

எகிப்தில் இராணுவ புரட்சி மூலம் ஜனாதிபதி முகமது முர்சி பதவி இழந்தார். தற்போது அவர் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளார்.

அவரை விடுவித்து மீண்டும் ஜனாதிபதியாக்க கோரி அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவரை கடத்தி இராணுவம் சிறை வைத்திருப்பதாக முர்சியின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து முர்சியின் மகள் ஷாஸ்மா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இராணுவம் மூலம் கடந்த 3-ம் திகதி அன்று எனது தந்தை கடத்தப்பட்டார். அவரை பற்றிய தகவல் எதுவும் இல்லை. அவரது பாதுகாப்புக்கு இராணுவமே பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறியுள்ளார்.

முர்சியின் மகன் ஒசாமா வக்கீல் ஆக உள்ளார். தனது தந்தையின் கைது குறித்து அவர் கூறும் போது, அவரது கைது நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், கூறும் போது, கடந்த 3-ம் திகதி தான் கடைசியாக எனது தந்தையை சந்தித்தேன். அதன் பிறகு அவருடன் எனக்கு தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template