ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தனது பதவி இராஜினாமா அறிவிப்பை சற்றுமுன்னர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன
ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து எதிர்வரும் வட மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து அரசாங்கத்தின் வெற்றிக்காக செயற்படுவேன் என தயாசிறி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தயாசிறி இவ்வறிவிப்பை விடுத்துள்ளார்.
இதேவேளை கட்சிக்குள் இருப்பவர்கள் தன் மீது கல்லெறிவதாகவும் இதனாலேயே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானதாகவும் தனது விசேட கூற்றின்போது தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சியை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒத்துழைக்கவில்லை என்றும் எதேச்சதிகாரத்தினால் கட்சி சீரழிந்து வருவதாகவும் இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 10 வருடங்களாக ஆட்சியிலிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுமார் 40 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றியவர் அவர், ஐக்கிய தேசியக்கட்சியை கட்டியெழுப்ப முடியாது என்பதனால் ஜனநாயகத்தை தேடி போகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்தில் அமைச்சு பதவியை என்னால் பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் நான் அவ்வாறு செய்யப்போவதில்லை. வடமேல் மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே போட்டியிடுவேன். கடந்த தேர்தலின் போது ஒரு இலட்சம் விருப்பு வாக்குகளை பெற்ற நான் இம்முறை தேர்தலில் எவ்வாறு வெற்றிபெறபோகின்றேன் என்பதனை எதிர்க்கட்சித்தலைவரினால் பார்த்துக்கொள்ள முடியும்.
ஐக்கிய தேசியக்கட்சியை கட்டியெழுப்புவதற்கான முயற்சி கைகூடவில்லை, போராட்டம் பயனலிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !