கொழும்பு, நாரஹென்பிட்டி தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அதற்குள் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 39 வயதான நபர் ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்து நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இன்று (23) காலை வீசிய கடும் காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் மரம் முறிந்து விழுந்தமையின் காரணமாக கப் வண்டி ஒன்றும் மோட்டார் வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !