கடந்த சில வாரங்களாக பிரித்தானியாவில் நிலவிவரும் வெயில் 30டிகிரியை கடந்துள்ளதனால் பெருமளவிலான மக்கள் தமது கோடை காலத்தினை கடற்கரையோரங்களிலும் ஆறுகளிலும் மிக சந்தோஷமாக கழித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரித்தானியாவில் சில பகுதி வீதிகளில் போடப்பட்டிருந்த தார்கள் உருகியுள்ளதுடன், புற்கள் நிறைந்த சில பகுதிகள் தீப்பற்றி எரிந்துள்ளன.
இரண்டு ஏக்கர் அளவில் படர்ந்திருந்த புற்கள் எரிந்ததனால் 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த 60 தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் உயிராபத்துக்கள் எதுவும் நிகழவில்லை என பிரித்தானிய வானிலை அவதான நிலைய தெரிவித்துள்ளது.
2006ம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறான அதீத வெப்பம் நிறைந்த காலப்பகுதியாக இவ்வருடத்தை குறிப்பிடக்கூடியதாக இருக்கின்றதாகவும் மேலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் இன்னும் சற்றுக் கூடுதலான வெப்பத்தை (35C) உணரக்கூடியதாக இருக்கும் என பிரித்தானிய வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் இம்முறை சில விற்பனை நிலையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேலான Sun கிறீம்கள் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கபடுவதாகவும் சில விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !