காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்ற 13 வயது சிறுமியை 10 பேர் கற்பழித்த சம்பவத்தை ஆரவாரத்துடன் பார்த்து ரசித்த சிலர் அதை செல்போனிலும் படம் பிடித்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் உள்ள காப்பகத்தில் இருந்து கடந்த மாதம் 13 வயது சிறுமி தப்பிச் சென்றாள்.
விடுதியை விட்டு வெளியே வந்ததும் அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி ‘லிப்ட்’ கேட்டு ஏறினார். அந்த காரில் இருந்த 3 பேர் சிறுமியை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். தங்களது நண்பர்களையும் அங்கு வரவழைத்த பின்னர் சுமார் 10 பேர் அவளை மாறி, மாறி கற்பழித்தனர்.
விடிய, விடிய நடந்த இந்த கொடூரத்தில் வேதனை தாங்காமல் அந்த சிறுமி கதறி துடித்தாள்.
சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் இருந்து வந்த சிலர் அந்த கொடூர காட்சிகளை தங்களது செல்போனில் பதிவு செய்துக் கொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டினர். குற்றவாளிகளை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அவர்களில் ஒருவர் அளித்த புகாரின்பேரில் விரைந்து வந்த பொலிசார் 3 பேரை மட்டும் கைது செய்து தப்பியோடிய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !