Headlines News :
Home » » மனைவியின் நண்பி வல்லுறவு: நிர்வாண நிலையில் படம்பிடித்து மிரட்டல்!

மனைவியின் நண்பி வல்லுறவு: நிர்வாண நிலையில் படம்பிடித்து மிரட்டல்!

Written By TamilDiscovery on Saturday, July 20, 2013 | 8:16 AM

மனைவியின் நண்பியை வல்லுறவுக்கு உட்படுத்தி பணம் பறித்த நபர் விளக்கமறியலில்

மனைவியின் நண்பியான 37 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை தந்திரமான விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று, அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அவரைப் படம்பிடித்து, அந்த படத்தை பகிரங்கப்படுத்த போவதாக கூறி, சுமார் 50 லட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை பறித்த நபர் ஒருவரை அடுத்த மாதம் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரையே களுத்துறை மேலதிக நீதவான் அயோஷா ஆப்தீன் இன்று விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். முனசிங்க ஆராச்சிலாகே நந்தன பிரசன்ன என்ற இந்த சந்தேக நபர், பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி, அவரை தொடர்பு கொண்டு, தந்திரமான முறையில் இந்துருவ பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு வரவழைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

அந்த பெண்ணிடம் பணத்தை பெற்று கொண்ட பின்னரும், சந்தேக நபர் அடிக்கடி அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template