கடந்த 8 வருடங்களில் அரசாங்கம் முன்வைத்துவரும் திட்டமிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளால் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி வேகமடைந்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாடு முழுவதும் செயற்படுத்திய வீதி அபிவிருத்தி திட்டங்களால் கிராம பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமும் அதிகரித்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெருந்தெருக்கள் அமைச்சின் செயற்பாடு, ஊழியர் பிரச்சினை குறித்து ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பில் இன்று (04) அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பிரதான வீதிகள் மாத்திரமன்றி குறுக்கு வீதிகளையும் செப்பனிட ஒன்றிணைந்த திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உடைந்துள்ள குறுக்கு வீதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த 8 வருடங்களில் நாடு முழுவதும் வீதி அபிவிருத்திக்கென மாத்திரம் 500 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !