காலி பொலிஸ் பிரிவின் கிந்தோட்ட பிரதேசத்தில், நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் உட்பட இருவர் கைதாகியுள்ளனர்.
முச்சக்கரவண்டியொன்றில் பயணம் செய்துகொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 25 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பபற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இராஜகிரிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், கணவன் மனைவி எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் அக்மீமன பொலிஸ் பிரிவில் ஹெரோயினுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 45 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் இன்றையதினம் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !