புகைத்தலினால் உலகளவில் வருடத்திற்கு 60 இலட்சம் பேர் மரணமடைகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
அவர்களில், அதிகமானோர் குறைந்த மற்றும் மத்திய வருமானங்களை பெறும் நாடுகளைச்சேர்ந்தவர்கள் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமை நீடிக்குமாயின் 2030 ஆம் ஆண்டில் புகைத்தலினால் மரணமடைவோரின் எண்ணிக்கை 80 இலட்சமாக அதிகரிக்கும் என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 2030 ஆண்டளவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற மரணத்தில் நூற்றில் எண்பது வீதமானவை குறைந்த மற்றும் மத்திய வருமானம் பெறும் நாடுகளிலேயே இடம்பெறும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
புகைப்பொருட்கள் உற்பத்தி மற்றும் அவற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பிரசாரங்களை மேற்கொள்ளவில்லையாயின் இளைஞர்கள் மத்தியில் புகைபொருள் பாவனை இன்னும் இன்னும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் மாக்கிரட் மேன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !