சீனாவின் அன்ஹுயி மாகாணத்தில் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட 6 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த காமுகனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அன்ஹுயி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கூலி வேலை செய்துவரும் சங் குவிங்ஹய் என்பவன் சிறுமிகளுக்கு குளிர்பானம், பென்சில் போன்றவை வாங்கி தருவதாக ஆசை காட்டி தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக உள்ளூர் மக்கள் பொலிசில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, சங் குவிங்ஹய்யை பொலிசார் கைது செய்து விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
2008-2012ம் ஆண்டுக்குள் சுமார் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட 6 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த காட்சிகளை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்ததாகவும் அவன் வாக்குமூலம் அளித்தான்.
அவன் மீது கடந்த ஒரு ஆண்டாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து 9 சிறுமிகளின் வாழ்வை சீரழித்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !