சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. சூர்யா இதில் பங்கேற்று பேசியதாவது:-
‘சிங்கம் 2’ படம் ஹிட்டானது சந்தோஷமாக உள்ளது. இந்த வெற்றி எனக்கு தேவைப்பட்டது. இதற்காக ரொம்ப நாள் காத்து இருந்தேன். எல்லோரும் கடுமையாக உழைத்தோம். இந்த படம் எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற பயம் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் இருந்தது.
படம் வெளியானதும் ஆரம்பம் முதல் கடைசி வரை கைதட்டல் விசில் என இரசிகர்கள் இரசித்து பார்த்ததும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. பண்டிகை காலங்களில் தான் கூட்டம் வரும் ஆனால் ‘சிங்கம் 2’ படம் பார்க்க பண்டிகை காலத்தைபோல் பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டமாக வந்தனர். வேலை நாளில்கூட படத்துக்கு இவ்வளவு பெரிய ‘ஓப்பனிங்’ கொடுத்ததற்காக எல்லோரையும் கையெடுத்து கும்பிடுகிறேன். ஒரு நடிகன் என்ற முறையில் நடிப்பு, உடற்பயிற்சி, காட்சிகளில் நடிப்பது என்றுதான் நான் இருந்தேன். இயக்குனர் ஹரி எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்தார். அவருடன் இது நான்காவது படம். அவர் உழைப்பை பார்த்து வியந்து போனேன். மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்க ஆசை உள்ளது.
தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள் என்று எல்லா மட்டத்திலும் பாராட்டுகிறார்கள். பத்திரிகைகளும் பாராட்டுகின்றன. எல்லோருக்கும் நன்றி. வெற்றி தோல்வியை மறைக்க கூடாது. ஏற்றுக் கொள்ளவேண்டும். எனது இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் இரசிகர்களை போய் சேரவில்லை.
கமல் சந்தித்த வெற்றி தோல்வி பற்றி நாசர் என்னிடம் சொன்னார். அது எனக்கு டானிக் மாதிரி சக்தி கொடுத்தது. என் மனைவி ஜோதிகா நீண்ட நாட்கள் படங்கள் பார்க்கவில்லை.
‘சிங்கம் 2’ படத்தை அவர் நான்கு தடவை பார்த்து கைதட்டி பாராட்டினார். அம்மா, தம்பி, தங்கைகள் இரசித்து பார்த்தனர். அப்பா ‘உன்னை நினைத்து பெருமைபடுகிறேன்’ என்று ‘மெசேஜ்’ அனுப்பினார். சந்தோஷமாக இருந்தது.
இவ்வாறு கூறினார்.
விஜயகுமார் பேசும் போது ‘சிங்கம் 2’ படத்தில் சூர்யா பிரமாதமாக நடித்துள்ளார். அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யாதான் என்றார். ரகுமான் பேசும்போதும் சூர்யா தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !