2006ம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 12 பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
உதவி பொலிஸ் அதிகாரி ஒருவரும் 11 பொலிஸ் விசேட அதிரடிப்படையினருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட உதவி பொலிஸ் அதிகாரி கொலை இடம்பெற்ற காலத்தில் திருகோணமலை பொலிஸ் பரிசோதகராக செயற்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த 4 மாணவர்களும் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்த ஒரு மாணவரும் 2006ம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !