ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதனை சுற்றியுள்ள சுமார் 52 கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின.
வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து இராணுவ விமானப்படை, இராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை துறையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மீட்புக்குழுவினர் கூறியதாவது, இப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.
யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள கர்னால், பானிபட், சோனிபட் ஆகிய இடங்களில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !