கடலில் கைதுசெய்யப்பட்ட ஐந்து இந்தியர்களும் எந்த இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்துவதற்கு GPS முறைமையைப் பயன்படுத்துமாறு சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி P.சுரசேன அனுமதி வழங்கியதாக அரசாங்க அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்பரப்பிற்குள் போதைப் பொருட்களைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே சிறிலங்கா கடற்படையினர் இந்த ஐந்து இந்தியர்களையும் கைதுசெய்திருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் இந்தியக் கடற்பரப்புக்குள் வைத்தே கைது செய்யப்பட்டதாகவும் இதனால் இவர்கள் சிறிலங்கா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட முடியாது எனவும் இவர்கள் சார்பாக வாதாடிய சட்டவாளர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்த ஐந்து இந்தியர்களும் எந்த இடத்தில் அதாவது இந்தியக் கடற்பரப்பிலா அல்லது சிறிலங்கா கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்துவதற்கு GPS தொழினுட்பத்தைப் பயன்படுத்துமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் கட்டளையிட்டதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !