சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படங்களில் ஒன்றான, இன்றும் வாரத்துக்கு ஒருமுறையாவது
தொலைக்காட்சிகளில் தவறாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தில்லுமுல்லு
படத்தை, மீண்டும் அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள்
ரஜினிகாந்த் இரட்டை வேஷத்தில் 1981ம் ஆண்டில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘தில்லுமுல்லு’. இதில் தேங்காய்சீனிவாசன், நாகேஷ், சவுக்கார்ஜானகி என பலர் நடித்திருப்பார்கள். ரஜினியின் இரட்டை வேஷத்தில் ஒன்று மீசை வைத்த ரஜினி, இன்னென்று மீசை இல்லாத ரஜினி. இந்த மீசை விவகாரத்தை வைத்தே அந்த படத்தை பல வாரங்கள் வெற்றிகரமாக மக்கள் பார்த்து ரசித்தார்கள்.
என்னதான் தலைமுறை இடைவெளி, ரசனை மாற்றம் என்றெல்லாம் சமாதானப்படுத்திக்
கொண்டாலும், ஒரிஜினல் தில்லுமுல்லுவையும் இந்த ரீமேக்கையும் ஒப்பிட்டுப்
பார்க்காமல் இருக்க முடியாது. அப்படி ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரிஜினலுக்கு
முன் இந்த ரீமேக் ஜூஜுபி!
இப்போது இதே பெயரில் தில்லுமுல்லு -2 என பத்ரி இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தங்கையை காப்பாற்ற முருகபக்தரான பிரகாஷ்ராஜ் நிறுவனத்தில் முருகபக்தர் வேஷம்போட்டு வேலைக்கு சேருகிறார் சிவா. கதராடை, நெற்றி நிறைய பட்டை என அச்சு அசலாக ரஜினியை அப்படியே உல்டா செய்திருக்கிறார்கள். 20 & 20 கிரிக்கெட் மேட்ச் பார்க்கப்போவதற்காக அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் அடிப்பட்டதாக பொய் சொல்லிவிட்டு கிரிக்கெட் மேட்ச் பார்க்கப்போகிறார் சிவா. அங்கே அவர் அடிக்கிற லூட்டிகளை பிரகாஷ்ராஜ் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
கோபத்தோடு ஆபீஸ் வருகிற பிரகாஷ்ராஜிடம் ‘நீங்கள் பார்த்தது என் தம்பி கங்குலி கந்தன் நாங்கள் இரட்டை பிறவி அவனுக்கு கண்கள் பூனைக்கண் என பொய் சொல்கிறான்.
பூனைகண் கங்குலி கந்தன் கராத்தே மாஸ்டர் என சொல்வதால் தன் மகளுக்கு கராத்தே சொல்லிக்கொடுக்க வீட்டுக்கு அழைக்கிறார் பிரகாஷ்ராஜ். வீட்டுக்கு வந்து கராத்தே சொல்லிக் கொடுப்பதில் இருவருக்கும் காதல் பிறக்கிறது.
இது தெரிந்ததும் அதிர்ந்துபோன பிரகாஷ்ராஜ் மகளை துபாய்க்கு அனுப்பி வைக்கிறார். கடைசியில் இருவரும் எப்படிபட்ட தில்லுமுல்லுகளை அரங்கேற்றி ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ்.
மூலகதையான ரஜினி தில்லுமுல்லுவில் இருந்த சுவாரசியம் கதை நேர்த்தி. காட்சியமைப்பு எதுவுமே இந்த தில்லுமுல்லு 2ல் இல்லை. பிரகாஷ்ராஜ் நேர்த்தியான நடிகர் என்றாலும் தேங்காய்சீனிவாசன் அளவுக்கு இந்த கதையில் அவர் நடிப்பு எடுபடவில்லை தேங்காய் சீனிவாசன் பின்னியெடுத்த அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வேடத்தில்
பிரகாஷ் ராஜ். சிவகுருநாதன் எனும் முருகபக்தராக, எதையும் சீக்கிரம்
நம்புகிற அல்லது சந்தேகப்படுவராக வருகிறார். அவ்வளவு பெரிய நிறுவனத்தின்
உரிமையாளர், திறமையாளர் இத்தனை மாங்காவாகவா இருப்பார். ஆனால் ஒரிஜினலில்
இப்படிக் கேட்க முடியாத அளவுக்கு தேங்காய் சீனிவாசன் பாத்திரமும்
நிகழ்வுகளும் பின்னப்பட்டிருக்கும். ரஜினியின் அம்மா ரோலில் முந்தைய படத்தில் சவுக்கார்ஜானகி நடித்த வேஷம் கோவை சரளாவுக்கு கொடுத்திருக்கிறார்கள். முருகபக்தையாக மாற்றி நாக்கில் வேல் குத்தி அலப்பறையை கொடுத்தாலும் ஒட்டமறுக்கிறது. ஒரு முறை இரு முறை என்றால் கூட பரவாயில்லை கோயிலில்,
நிச்சயதார்த்தத்தின்போது, சாதாரணமாக வீட்டிலிருக்கும்போது என எப்போதும்
நாக்கில் வேலோடு கோவை சரளா முடியல! அதே கோவை சரளா சாராயம் விற்கும் பெண்ணாக வருவது அவருடைய இயல்பான நடிப்பை காட்டுகிறது.
நாகேஷ் நடித்த வேஷத்தில் இதில் சத்யன். இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சிவாவின் தாய் மாமனாக இளவரசு அவருக்கும் பெருசாக நடிக்க வாய்ப்பில்லை. பிரகாஷ்ராஜின் செயலாளராக மனோபாலா அவருக்கு கொடுத்த வேலை சரியாக செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் நேரத்தில் திடீர் எண்ட்ரி தருகிறார் சந்தானம். நட்சத்திர பட்டாளத்தில் எண்ணிக்கை உயர்த்துவதற்காக அவருக்கு கெஸ்ட் ரோல் அவ்வளவுதான்.
படத்தின் பெரிய மைனஸ் கதாநாயகி இஷா தல்வார். புதுமுகத்தை போட்டிருக்கிறார்கள் முகத்தில் நடிப்பு எங்கேயிருக்கிறது என தேடவேண்டியிருக்கிறது. ஏதோ மும்பை எக்ஸ்ட்ரா மாதிரி தெரிகிறார். முகத்தில் ஒரு களை இல்லை. நடிப்பு....? கவர்ச்சி என்ற பெயரில் ஆடையை குறைத்து பயமுறுத்துகிறார்கள் லாங் ஷாட்டில் மட்டுமே நளினமாக தெரியும் ஹீரோயின் குளோசப் காட்சிகள் பயங்கர ‘தில்லுமுல்லு’.
யுவன்ஷங்கர்ராஜாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். பழைய தில்லுமுல்லு படத்தில் இருந்து இரண்டு பாடல்களை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். என்ற போதும் எதுவும் மனசில் ஒட்டமறுக்கிறது. ஒளிப்பதிவிலும் பெருசாக புதுமை எதுவும் இல்லை. வசனங்களிலும் பழைய தில்லுமுல்லு படத்தில் பல இடங்களில் ‘நறுக்’கென ரஜினி பேசுவார். தில்லுமுல்லு 2 படத்தில் அப்படி பேச சிவா முயற்சிக்கிறார் அது எடுபடவில்லை கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு
வசனத்தை ஒப்பிக்கிறார் சிவா. இதையே நடிப்பு என நம்ப
ஆரம்பித்திருக்கிறார்கள் இன்றைய ரசிகர்களும் விமர்சகர்களும். ராகங்கள்
பதினாறு பாடலில் சிவாவின் உடல் மொழியும் பாவங்களும் ரொம்ப்ப பாவம்! பழைய தில்லுமுல்லுவில் ரஜினிக்கு மீசை. பொய் சொல்வதற்கு கால்பந்து விளையாட்டு. பாட்டு சொல்லிக் கொடுக்கப்போய் முதலாளி பெண்ணை காதலிப்பது. தில்லுமுல்லு 2ல் சிவாவுக்கு பூனைக்கண் பொய் சொல்வதற்கு 20&20 கிரிக்கெட் மேட்ச் கராத்தே சொல்லிக் கொடுக்கப்போய் முதலாளி பெண்ணை பெண்ணை காதலிப்பது.
குன்றத்தூர் முருகன் கோயிலில் நடக்கும் கல்யாண காட்சியும் அதில் நடக்கும்
சுவாரஸ்ய ஆள்மாறாட்டங்களும் சுந்தர் சி பட எஃபெக்டைத் தருகின்றன. இந்த
க்ளைமாக்ஸ் மொத்தத்தையுமே சந்தானத்திடம் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள்.
லக்ஷ்மனின் ஒளிப்பதிவில் விசேஷம் ஒன்றுமில்லை. துபாய் காட்சிகளில் கூட
கிராபிக்ஸ் விளையாடுவதால், ஒளிப்பதிவாளர் காணாமல் போகிறார். எம்எஸ்வி -
யுவன் இசைக் கூட்டணியில், அந்த டைட்டில் ரீமிக்ஸ் அசத்தலாக உள்ளது.
ராகங்கள் பதினாறு பாடலை அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள். கார்த்திக்
குரலை மட்டுமல்ல, மொத்த பாட்டையுமே கூட ரசிக்க முடியவில்லை. ஏதோ கோயிலில்
கச்சேரி கேட்ட உணர்வு!
ரொம்ப ஸாரி... இந்த முறை உங்கள் ஷோ எடுபடவில்லை! பாத்திரங்கள், அதற்கான
தேர்வுகளில் இயக்குநர் கோட்டைவிட்டாலும், வசனங்கள் அவருக்குக்
கைகொடுக்கின்றன. சின்னச் சின்ன டைமிங் வசனங்களில் கிச்சு கிச்சு
மூட்டுகிறார். thillu mullu review க்ளைமாக்ஸை முழுசாக
மாற்றியிருக்கிறார்கள். ஒரிஜினல் தில்லுமுல்லு ஒரு காமெடிப் படம்
என்றாலும், அத்தனைக் காட்சிகளிலும் ஒரு நேர்த்தியும் ஒழுங்கும் ஸ்டைலும்
அழகுணர்வும் மனதை ஆளும் இசையும்... அனைத்துக்கும் மேல் ரஜினியின் சுவாரஸ்ய
நடிப்பும் இருந்தது. அதெல்லாம் இந்த ரீமேக்கில் இல்லை.
ஒருவேளை இதெல்லாம் இல்லாமலிருப்பதுதான் இந்தத் தலைமுறை பாணி என நினைத்துக் கொண்டார்களோ!
ரஜினியின் தில்லுமுல்லுவில் இருந்த ரசனை இல்லை, கம்பீரம் இல்லை, காமெடி இல்லை, காட்சியமைப்பு இல்லை, வசன உச்சரிப்பு இல்லை மொத்தத்தில் இது ‘தில்லுமுல்லு’வே இல்லை! ரஜினியின் தில்லுமுல்லு படத்தை மறந்துவிட்டு இந்தப் படத்தைப் பார்த்தால்... ரசிக்கலாம்!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !