ஆடை தொழிற்சாலை யுவதி சமிளா திசாநாயக்கவின் மரணம் சந்தேகத்துக்கிடமானது என்று நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரி வைத்தியர் அன்டன் திசேரா நேற்று நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் கடமை புரிந்து வந்த சமிளா திசாநாயக்க (23 வயது) என்ற யுவதி நீர்கொழும்பு வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற போதே வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வைத்திய அதிகாரி அங்கு சாட்சியமளிக்கையில்,
ஒருவர் வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே பாய்ந்தால் வைத்தியசாலையின் கட்டிடத்தின் நான்கு அடிகளுக்கு அப்பாலேயே வீழ்ந்திருப்பார்.
ஆயினும் சமிளா திசாநாயக்கவின் உடல் வைத்தியசாலையின் சுவருக்கு அருகாமையில் உள்ள பூ மரங்களையும் சேதப்புடுத்திக் கொண்டு விழுந்துள்ளது.
இதன் காரணமாக இது ஒரு சந்தேகத்துக்கிடமான மரணம் என தெளிவாகத் தெரிகிறது என்றார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் கடமை புரிந்து வந்த சமிளா திசாநாயக்க (23 வயது) என்ற இளம் யுவதியே கொலை செயயப்பட்ட யுவதியாவார்.
இச்சம்பவம் தொடர்பாக வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ என்பர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்காக வந்த யுவதியை சந்தேக நபரான வைத்தியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !