Headlines News :
Home » » ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய விக்ரம் அகர்வாலுக்கு ஜாமீன்.

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய விக்ரம் அகர்வாலுக்கு ஜாமீன்.

Written By TamilDiscovery on Friday, June 14, 2013 | 5:23 AM

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னையை சேர்ந்த நட்சத்திர ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. முதலில் மும்பை குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி இதுபற்றி விளக்கம் அளித்த விக்ரம் அகர்வால், பின்னர் கடந்த 10-ம்தேதி சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார்.

தீவிர விசாரணைக்குப் பிறகு அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் சூதாட்டம் பற்றிய பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. விசாரணைக்குப்பிறகு அவர் இன்று மீண்டும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதி, விக்ரம் அகர்வாலுக்கு ஜாமீன் வழங்கினார். மேலும் அவர் தினமும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார். சென்னையில் கைதான 11 பேருக்கு இதுவரை ஜாமின்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template