கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
விறகு சேகரிக்கச் செல்லும் வண்டில்காரர்களிடம் அனுமதிப்பத்திரம் தொடர்பில் பொலிசார் வாக்குவாதப்பட்டுள்ளனர்.அதனையடுத்து கடும் கோபம் கொண்ட பொலிசார் பொதுமக்களின் ஏராளமான வாகனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து பொலிசார் பொதுமக்கள் இடையில் கடும் முறுகல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பதட்டத்தைத் தணித்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பிரதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும் அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !