கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது அங்கமாலி சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. ஆக இருப்பவர் ஜோஸ் தெட்டியல். 68 வயதாகும் இவர் சோசலிஸ்டு ஜனதா கட்சியை சேர்ந்தவர். கடந்த முறை கேரளாவை ஆண்ட அரசில் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்தார். இவரது மகன் ஆதர்ஷ் (28).
கேரள மாநிலம் அங்க மாலி அருகேயுள்ள மஞ்சப் பிரா என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக 26 வயது இளம்பெண் பணியாற்றி வருகிறார். அவர் ஆலுவா போலீஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இன்ஸ்பெக்டர் உசேனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
நானும் ஜோஸ் தெட்டியலின் மகன் ஆதர்சும் காதலித்து வந்தோம். அப்போது அவர் என்னிடம் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். அதை உண்மை என்று நம்பிய நான் என்னையே அவரிடம் ஒப்படைத்தேன். அவர் என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 2 மாதமாக அவர் என்னை சந்திப்பதையே தவிர்த்து வந்தார்.
எனவே நானே நேரடியாக சென்று அவரை சந்தித்தேன். என்னிடம் ஏன் பேசவில்லை. என்னை எப்போது திருமணம் செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு ஆதர்ஷ் உன்னை திருமணம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார். இது குறித்து நியாயம் கேட்பதற்காக ஆதர்ஷின் தந்தையான ஜோஸ் தெட்டியலை சந்தித்தேன். எங்கள் காதல் விவரத்தை எடுத்துக் கூறினேன்.
தற்போது ஆதர்ஷ் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்றேன். அதற்கு ஜோஸ் தெட்டியல் எம்.எல்.ஏ. கண்டிப்பாக எனது மகனுக்கு உன்னை திருமணம் செய்து வைக்கிறேன். அதற்கு பரிசாக நீ என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார். அதிர்ச்சி அடைந்த நான் வேறு வழியில்லாமல் சம்மதித்தேன். அதைத்தொடர்ந்து அவரும் என்னை அனுபவித்தார். பின்னர் அவரும் விலகிக் கொண்டார்.
எனது வாழ்க்கையை சீரழித்த ஜோஸ் தொட்டியல் எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் ஆதர்ஷ் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் உசேன் உயர் போலீஸ் அதிகாரியான டி.எஸ்.பி. ஜார்ஜுக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் மீது 376-வது பிரிவின் கீழ் (கற்பழிப்பு) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜோஸ் தெட்டியல் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி. ஆதாரத்தையும் போலீசாரிடம் வழங்கினார். இந்தவிவகாரம் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இதுபற்றி கேரள போலீஸ் இலாகா மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, அங்கமாலி எம்.எல்.ஏ. ஜோஸ் தெட்டியல், அவரது மகன் ஆதர்ஷ் ஆகியோர் மீது கூறப்பட்ட புகார் பற்றி எர்ணாகுளம் குற்றப் பிரிவு போலீஸ் எஸ்.பி. அஜிதாபேகம் சுல்தான் விசாரணை நடத்துவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த குற்றச்சாட்டு குறித்து ஜோஸ் தெஙட்டியல் கூறும் போது, இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன் என்றார். பெண் என்ஜினீயரை எம்.எல்.ஏ.வும் அவரது மகனும் கற்பழித்த சம்பவம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !