அமெரிக்காவின், ஒகியோவில் டயான் சர்வதேச விமான நிலையத்தில், நடந்த 39-வது விமான சாகச நிகழ்ச்சியில், விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளனர்.
இந்த சாகச நிகழ்ச்சியைக் காண விமான நிலையத்தில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர்.
அப்போது, விமானம் ஒன்றின் இறக்கைகளின் மீது ஏறி ஜேன்விக்கர் என்ற பெண் சாகசம் நிகழ்த்தினார். விமானி சார்லஸ் ஸ்வென்கர் விமானத்தை ஓட்டினார். அவர் விமானத்தை மேலேயும், கீழேயுமாக பல கோணங்களில் ஓட்டி சாகசம் நிகழ்த்தினர். அப்போது திடீரென விமானம் தலைகீழாக பாய்ந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானம் வெடித்து சிதறி அதிலிருந்து பெரிய பந்து போன்று நெருப்பு கிளம்பியது.
அந்த நெருப்பில் சிக்கி விமானி சார்லஸ் ஸ்வென்கர் மற்றும் விமான இறக்கையில் அமர்ந்து சாகசம் புரிந்த ஜேன்விக்னர் என்ற பெண்ணும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இச்சம்பவம் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது. எனவே இது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !