பின் கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அடர்த்தி குறைந்து, நாளடைவில் வழுக்கை தலையை அடைய நேரிடும். எனவே கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமெனில், உணவில் கவனமாக இருக்க வேண்டும். இப்போது நல்ல ஆரோக்கியமான கூந்தல் வளர்வதற்கு, எந்த சத்துக்கள் மிகவும் இன்றியமையாதது என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, தவறாமல் அந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து, அழகான கூந்தலைப் பெறுங்கள்.
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்:
உடலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உற்பத்தியாகாது. ஆனால் உடலின் இயக்கம் முறையாக நடைபெற வேண்டுமெனில், இந்த சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இந்த சத்து ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக ஒமேகா-3 அதிகம் நிறைந்த மீனை அதிகம் சாப்பிட்டால், நல்ல வலுவான கூந்தலுடன், கூந்தல் உடைதலையும் தடுக்கலாம்.
புரோட்டீன்:
மயிர்கால்களானது புரோட்டீனால் ஆனது. எனவே உடலில் புரோட்டீன் குறைபாடு ஏற்பட்டால், மயிர்கால்கள் வலுவிழந்து இருப்பதோடு, பொலிவிழந்தும், வளர்ச்சி தடைபட்டும் காணப்படும். எனவே புரோட்டீன் அதிகம் நிறைந்திருக்கும் பால் மற்றும் முட்டையை அதிகம் சாப்பிடுவது நல்லது.
தண்ணீர்:
தண்ணீர் குடிப்பது சருமத்திற்கு மட்டுமின்றி, முடிக்கும் தான் நல்லது. எனவே தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், ஸ்கால்ப் வறட்சியடைந்து, கூந்தலானது உடைய ஆரம்பிக்கும். ஆகவே நாள்தோறும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.
இரும்புச்சத்து:
உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், கூந்தல் உதிர்தல் அதிகம் இருக்கும். அதிலும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது, அதிகப்படியான அளவு இரும்புச்சத்தானது இழக்க நேரிடும். எனவே பெண்கள் தினமும் இரும்புச்சத்துள்ள உணவுப் பொருட்களான கீரைகள், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
வைட்டமின்கள்:
பொடுகுத் தொல்லை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், வைட்டமின் குறைபாடு தான். ஏனெனில் தலையில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளிவரும் எண்ணெயானது வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களால் ஆனது. அதிலும் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், கூந்தல் உதிர்தலுடன், பொலிவிழந்த முடியை பெறக்கூடும். எனவே பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதிலிருந்து உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய வைட்டமின்களை பெறலாம்.
ஆரோக்கியமான கொழுப்பு:
கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான கொழுப்புக்களும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இவை மயிர்கால்களை வறட்சியடையாமல் பாதுகாப்பதோடு, கூந்தலை அடர்த்தியாகவும், பொலிவோடும் மின்னச் செய்யும். இத்தகைய கொழுப்பு நட்ஸில் அதிகம் கிடைக்கும். எனவே தினமும் நட்ஸை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியைப் பெறலாம். அதிலும் ஆளி விதை, வால்நட் மற்றும் பிரேசில் நட்ஸ் போன்றவற்றை இத்தகைய கொழுப்பு நல்ல அளவில் நிறைந்துள்ளது.
ஜிங்க் ஜிங்க் சத்து:
கூந்தலுக்கு பளபளப்பை கொடுப்பதோடு, வளர்ச்சியையும் அதிகரிக்கும். ஆனால் இந்த ஜிங்க் குறைபாடு இருந்தால், ஸ்கால்ப் பிரச்சனைகள், ஆரோக்கியமற்ற மற்றும் வலுவிழந்த கூந்தல் போன்றவற்றை பெற கூடும். எனவே இத்தகைய பிரச்சனைகளைப் போக்குவதற்கு ஜிங்க் அதிகம் நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களான கேல், பசலைக் கீரை மற்றும் கடல் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !