எமது மாணவர் செல்வங்கள் மீது ஆசிரியர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம். யாழ். கல்விச் சமுகம்
கடந்த வெள்ளிக்கிழமை கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் செல்வி.உதயகுமார் காயத்ரி (ஆண்டு 3டீ, வயது 8) என்னும் சிறுமியின்
வகுப்பாசிரியரான சாரதா அவர்கள் கணித பாடத்தில் 10 கேள்விகள் கொடுத்து அதில் 2 பிழை விட்டதால் அச்சிறுமியை காட்டுமிராண்டித்தனமாக கண்டித்திருக்கிறார்.
இச்சிறுமி தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால் அம்மாணவியும் மேலும் அவ்வகுப்பில் படிக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த உளத்தாக்கத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
இவ்விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட சாரதா
ஆசிரியரை சந்திக்க முயன்றும் முடியாமல் போனதால் அங்கு கற்பிக்கும் சக
ஆசிரியரான சபானந்தம் அவர்களிடம் முறையிட்ட போது “அவ் ஆசிரியர் பிள்ளைகளுக்கு இவ்வாறு கண்டித்தால் தான் உருப்படும்” என்று கூறியுள்ளார். குறிப்பாக எமது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் பல வழிகளிலும்
உளத்தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே இந்த விடயம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பெற்றோரை அழைத்து சுமுகமான முறையில் உறவுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இனிவரும் காலங்களில் எமது ஆசிரியர்கள் இவ்வாறான
செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமெனவும் இன்றைய செல்வங்கள் நாளைய தலைமுறையினர் என நினைத்து அன்பாகவும் ஆதரவாகவும் பழகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !