பிரிட்டனை சேர்ந்த 35 வயதான Seyi Kolade என்ற பெண், செக்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகி இதுவரை தான் 370 ஆண்களுடன் உடலுறவு கொண்டதாக அதிர்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரிட்டனில் உள்ள பார் ஒன்றில் பணிபுரியும் இந்த பெண், முதன் முதலாக 13 வயதில் தன்னுடைய கற்பை தனது ஆண் நண்பரிடம் இழந்ததாகவும், 14 வயதில் சாரா என்ற பெண் குழந்தைக்கு தாயானதாகவும் கூறியுள்ளார்.
17 வயதில் இவர் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி பிரிட்டன் பார் ஒன்றில் பணி புரிந்தார். அதனால் அவருக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. மது அருந்தி விட்டால் உடனே யாருடனாவது செக்ஸ் உறவு கொள்ள வேண்டும் என அவருக்கு தோன்றுமாம். பாருக்கு வரும் வாடிக்கையாளர்களை உடனே படுக்கைக்கு அழைத்து சென்று விடுவாராம்.
கடந்த 13 வருடங்களில் ஒருநாள் கூட ஆண்களுடன் படுக்கையை பகிராமல் தூங்கியதில்லை என்று கூறும் இவர், ஒருவித செக்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தீவிர சிகிச்சைக்கு பின் குணமாகியுள்ள இவர், இனி தன் வாழ்நாள் முழுவதும் சமூக சேவை புரிந்து வாழப்போவதாக பேட்டி அளித்துள்ளார்.
ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் Seyi Kolade, தற்போது பிரிட்டனில் உள்ள பெண்கள் நல காப்பகத்தில் வசித்து வருகிறார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !