நாவலப்பிட்டி, பவ்வாகம பாலத்திற்கு அருகில் களனி கங்கையில் குதித்து ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
45 வயதான நிஷாந்தி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நாவலப்பிட்டி தேசிய பாடசாலையின் ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்தனர். இவரது சடலம் தெருவாதெனிய பிரதேசத்தில் கரை ஒதுங்கியுள்ளது. ஆசிரியை கங்கையில் குதித்த இடத்தில் இவரது கையடக்கத் தொலைபேசி, தேசிய அடையாள அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளன.
இவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !