போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலில் எங்காவது கார் சிக்கிக் கொண்டால் அங்கிருந்து செங்குத்தாக மேலெழுந்து பறக்கும் விதமாக இந்தக் கார் வடிவமைத்துள்ளது. 'டி.எப் - எக்ஸ்' என்ற இந்த பறக்கும் காரில் நான்கு பேர் பயணம் செய்யலாம்.
அமெரிக்காவின் பொறியியல் வல்லுநர் குழு வடிவமைத்துள்ள இந்த காரை ஓட்டுவதற்கு விமானிகளைப் போல் உரிமம் பெறவேண்டும் என்ற அவசியமில்லையாம்.
இந்தக் கார் மேலெழுந்து பறக்கும்போது, 805 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக்கூடியதாக இருக்கும். கார் மேலெழுந்தவுடன், அதில் மடங்கியிருக்கும் இறக்கைகள் விரிந்து கார் பறக்க உறுதுணையாக இருக்கும். இதை ஓட்டுவோரின் அருகில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இருவகை இயக்கங்கள் கொண்ட இந்தக்காரில் உள்ள என்ஜின் எரிபொருளால் மட்டுமல்ல, கார் ஓடும்போது உற்பத்தியாகும் மின்சாரத்தினாலும் இயங்கக்கூடியது என்று மேற்படி காரை நிர்மாணித்த பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 8 முதல் 12 வருடங்களுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தக் காரில் சென்சார் சாதனங்களும் வழிகாட்டும் கருவியும் இருப்பதால், செயற்கைக்கோள் வழிகாட்டுதல் மூலம் செல்லும் இடத்திற்கு விரைவில் செல்லமுடியும்.
மேலும் செல்லவேண்டிய இடத்தின் தூரத்தைக் கொண்டு, எரிபொருள் கையிருப்பையும் எளிதில் தெரிந்துகொள்ளும் வசதி இதில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Home »
Technology
» அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு பறக்கும் கார்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.
அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு பறக்கும் கார்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.
Written By TamilDiscovery on Tuesday, May 21, 2013 | 12:06 AM
Related articles
- மைக்ரோசொப்ட்.
- மென்பொருட்களின் உதவியின்றி யூடியூப் விடியோக்களை இலகுவாக தரவிறக்க.
- கைபேசி உலகை புரட்டிப் போடும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்.
- பற்களால் இயக்கும் அதிநவீன மியூசிக் பிளேயர் அறிமுகம்.
- ஐ.ஓ.எஸ் 7 'வோட்டர் புரூப்': போலி விளம்பரத்தால் நொந்து போகும் பாவனையாளர்கள்!
- இணையமும் சமூக வலைத்தளங்களும் உங்கள் வாழ்வை அளிக்கவ? வளப்படுத்தவா?
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !