தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இதில் ஒரு அணிக்கு நடிகர் விஜய்யின் ஆதரவு உள்ளதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நான் ஹைதராபாத்தில் நடக்கும் ‘ஜில்லா' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குறிப்பிட்ட ஒரு அணியை நான் ஆதரிப்பதாக வதந்தி பரவியுள்ளது. பலர் என்னிடம் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட வண்ணம் உள்ளனர். நான் எந்த அணியையும் ஆதரிக்கவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இரண்டு அணிகளிலும் என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் உள்ளனர். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நான் பொதுவானவன். இந்த தேர்தலில் வெற்றி பெறும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
ஜில்லாவில் அரசியல்:
ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதா என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் நேசன்.விஜய்யின் தலைவா படம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து சமீபத்தில் தான் வெளியானது.
இதனையடுத்து ஜில்லாவில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி நீக்கிவிட்டாராம். மேலும் தனது படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களே கூடாது என்றும் கூறிவிட்டாராம்.
இதுகுறித்து இயக்குனர் நேசன், ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவிகிதம் கூட இருக்காது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய திரைக்கதை அப்படியே தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஜில்லா என்ற தலைப்பை விஜய்யிடம் நேசன் தெரிவித்ததுமே அவர் குஷியாகி இதுவே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம்.
முன்னதாக நேசன் விஜய்யின் வேலாயுதம் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவா வசூல்:
ஜில்லாவுக்கு வந்த சோதனை: இது அந்த ஜில்ல இல்லையாம் நேசன் விளக்கம்!
ஜில்லா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
வீரத்துக்கு பின்வாங்கிய ஜில்லா!
அசர வைக்கும் அழகில் ஜொலிக்கப்போகும் 'ஜில்லா' விஜய்! jilla.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !