Headlines News :
Home » » கணினியும், இணையமும் நீங்கள் அறிந்திராத தகவல்கள்.

கணினியும், இணையமும் நீங்கள் அறிந்திராத தகவல்கள்.

Written By TamilDiscovery on Tuesday, May 21, 2013 | 8:50 PM

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவாசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்து கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது.

 மனிதன் கண்டுப்பிடித்த அரிய கருவி கணினி. கணினிப் பொறியின் பயன்பாட்டினால் மனிதர்களின் வேலை வாய்ப்பு குறையும் எனும் ஐயம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், இன்றோ மனிதனுடைய எல்லாத் தேவைகளுக்கும் கணினியே முக்கியமாக விளங்குகின்றது. கல்வித்துறை, அறிவியல் துறை, தொழில்துறை, மருத்துவத் துறை, இராணுவத் துறை, போக்குவரத்துத் துறை என்று பல துறைகளில் கணினியின் பங்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

 கணினிப் பொறியினால் மனிதன் மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாகச் செய்ய முடிகிறது. ஓரே இடத்தில் இருந்து கொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடிகிறது; உடனுக்குடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது. இதனால் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும் முறை குறைந்து வருகிறது.

 வங்கிகளில் கணினியின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வங்கியில் பணம் போடுவதும் எடுப்பதும்கூட கணினி மூலம் நடைபெறுகிறது. இந்தச் சேவையை அலுவலக நேரத்திற்குப் பிறகும் பெற முடியும். அதனால் வங்கியில் முன்போல் வரிசைப்பிடித்து அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. விமான நிலையங்கள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் கணினியின் மூலம் பயணச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். வீட்டிலிருந்து கொண்டே கணினி மூலம் பயணச் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இதனால் மனிதர்களுடைய நேரமும், சிரமமும் குறைகின்றன.

 விண்வெளி ஆய்வை மேற்கொள்ள கணினியே முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆய்வைத் திட்டமிடவும் செயல்படுத்தவும் கணினி பெரிதும் உதவுகிறது. பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே கணினி மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. மனித முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கணினியை அனைவரும் பயன்படுத்திப் பயனடைவோம்.

1) இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்டன் ஸர்ஃப்

2) (WWW) World Wide Web – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ

3) World wide Web எனபதன் துவக்க கால பெயர் -  என்க்வயர் கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் “புன்னகை தவழும் முகம்” எனபதைக் குறிக்க  :-)  எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன்முதலாக (1982)ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் இஃபால்மன் எனும் பேராசிரியர்.

4) கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்ர்ஜி ஃப்ரின்.

5) உலகின் முதல் மடிக்கணினி - டைனாபுக் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

6) பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்.

7) பிரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை உருவாக்கியவர் - ஃபால் பிரெயினார்ட்.

8) பெண்டியம் புராசஸர்களின் தந்தை எனப்படும் இந்திய விஞ்ஞானி - வினோத் தாம்.

9) பால் பிரெயினார்ட் என்பவை இந்தியாவின் சூப்பர் கம்யூட்டர் என அழைக்கப்படுகின்றன.

10) C++ எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்
லோட்டஸ் 1-2-3 எனும் மொழியை கண்டுபிடித்தவர் - மிச் கபோர்

11) பிரபலமான (Dos) எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிம் பாட்டர்ஸன்.

12) தனது 20 ஆம் வயதிலேயே லினக்ஸ் உருவாக்கிய விஞ்ஞானி - லினஸ் தோர்வாட்ஸ்.

13) ஆப்பிள் கணினியைத் துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்.

14) (CD) குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்.

15) Power by Intellect Driven by Values - என்ற முத்திரை வாக்கியம் பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாக்கியம்.

16) ஹாட் மெயிலை உருவாக்கிய இந்திய ஐ.டி விஞ்ஞானி - ஸபீர் பாட்டியா.

17) இந்தியாவில் ஐ.டி சட்டம் நிலுவையில் வந்த வருடம் - 2000 ஆம் ஆண்டு
இந்தியாவில் மிக அதிகம் மென்பொருள் ஏற்றுமதி  செய்யும் நிறுவனம் -  டி.சி.எஸ்.

18) கணினி அறிவியலின் தந்தையார் - ஆலன் டூரிங்.

19) உலகின் முதல் மைக்ரோபுராசஸர் இன்டெல் என்பதாகும்.

20) முதல் மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர் – டெட் ஹோப்.

21) கணினி மவுஸை கண்டுபிடித்தவர் – மக்ளஸ் எங்கன்பர்ட்.

22) கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர் – ஜாக் கில்பி.

23) இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர்.

24) Computer Tabulating and recording Company என்பதுதான் இப்போது ஐ.பி.எம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

25) உலக கணினி எழுத்தறிவு தினம் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.

26) Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAC எனப்படுவதாகும்.

27) “புராஜெக்ட் சிகாகோ” என்பது விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயராகும்.

28) கிரிக்கெட் பந்தின் வேகத்தை அளக்க ஹாக் ஐ (Hawk Eye) என்ற பிரபல ஐ டி தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.

29) கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர் – அலன் ஷூகர்ட்.

30) ஹெர்பர்ட் சைமன் துவங்கிய கணினி அறிவியல் பிரிவின் கிளைதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பதாகும்.

31) இன்டல் கம்பெனி நிறுவனர்கள் – கார்டன் மூர் மற்றும் ராபர்ட் நாய்ஸ்.

32) கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் – ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்.

33) உலகின் முதல் கணினி விளையாட்டு Space War என்ற விளையாட்டாகும்.

34) விலை குறைந்த (ரூ.4000) PC கணினி உருவாக்கிய இந்திய நிறுவனம் நொவாட்டியம் என்ற நிறுவனமாகும்.

35) “Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சார்ந்ததாகும்.

36) Uniform Resource Location என்பதன் சுருக்கம்தான் URL முகவரியாகும்.

37) மைக்ரோபுராசஸர் என்பதுதான் கணியின் மூளை என்றழைக்கப்படுகிறது.

38) கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி – மதர் போர்ட்.

39) கணினியின் ஈதர் நெட்டை கண்டுபிடித்தவர் – ராபர்ட் மெட்காஃப்.

40) மிக வேகமான சூப்பர் கணினிகள் “ப்ளூ ஜூன்” என்றழைக்கபடுகின்றன.

41) கேமரா மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர் – ஃபிலிப் கான்.

42) மைக்ரோபுராசஸரை நினைவகத்தோடு இணைக்கும் ஒயர்கள் Bar என்ற பெயரில் அழைக்கபடுகின்றன.

43) Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம்தான் VIRUS என்ற பிரபல வார்த்தையாகு.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template