Headlines News :
Home » » கனடா வானவெளியில் பறக்கும் தட்டுக்கள்?

கனடா வானவெளியில் பறக்கும் தட்டுக்கள்?

Written By TamilDiscovery on Wednesday, May 22, 2013 | 6:57 AM

கனடா நாட்டில், அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் இது போன்ற 2000 தட்டுகள் அந்நாட்டில் தென்பட்டுள்ளதாக இது குறித்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதம் அதிகமாகும்.

கடந்த 2011ம் ஆண்டில், 986 தட்டுகள் இது போன்று தெரிந்துள்ளன. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 1981ஆக அதிகரித்துள்ளது.

மேலும் முன்னர் இருந்ததைவிட, தற்பொழுது கனடா மக்கள் அதிக அளவில் வானத்தைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்று கிரிஸ் ருட்கொவ்ச்கி என்ற விஞ்ஞான எழுத்தாளர் கூறுகின்றார்.

இத்தகைய தட்டுகள் மாறுபட்ட வடிவங்களில் தென்படுகின்றன. அதாவது முக்கோண வடிவிலோ, ஒளிப்பிழம்பு போன்றோ, வட்டவடிவ பறக்கும் தட்டாகவோ போன்ற பல்வேறு மாறுபட்ட தோற்றங்கள் மக்களுக்குத் தென்படுகின்றன.

10 வயது சிறுவன் ஒருவன் தான் பார்த்தைப் பற்றி குறிப்பிடுகையில், ஒரு நிமிடம் கண்ணுக்குத் தெரிந்த அது, பின்னர் வானத்தில் மிக வேகமாகப் பறந்து சென்றது என்று கூறுகின்றான்.

இத்தகைய பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், விவாதங்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில், நாசா விண்வெளிமையம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வட்டவடிவ தட்டு போன்ற ஒரு அமைப்பு வானவில் நிறத்தில் வெளிச்சத்தை இறைத்தவாறு பூமியின் மேற்பரப்பில் வட்டமிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template