அதாவது இதேபோன்ற ஒரு தாக்குதலுக்குப் பின்னர்தான் அல் கொய்தாவை நிறுவியவரான ஒசாமா பின்லேடன் சர்வதேச அளவில் மிகவும் தேடப்படும் தீவிரவாதியாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டான்.
நைரோபி தாக்குதலுக்குப் பின்னர்தான் பின்லேடனின் முகம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பானதாக உருவெடுத்தது. 1998ல் நடந்த இந்த தாக்குதலுக்குப் பின்னர்தான் பின்லேடனை நம்பர் ஒன் தீவிரவாதியாக அமெரிக்காவும் அறிவித்து அவனைத் தீவிரமாக தேடத் தொடங்கியது.
அமெரிக்க தூதரக தாக்குதல்:
1998ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தான்சானியாவின் தார் எஸ் சலாம், கென்யாவின் நைரோபி ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.
சவுதிக்குள் காலடி வைத்த அமெரிக்க படைகள்:
சவூதிக்கு அமெரிக்க படைகள் வந்ததை எதிர்த்து, சவூதி அரேபியாவுக்கு அமரிக்கப் படையினர் வந்ததன் 8வது ஆண்டையொட்டி இந்த தாக்குதலை அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்தினர்.
ஒருங்கிணைந்த தாக்குதல்:
இந்தத் தாக்குதலை பின்லேடன், அய்மான் அல் ஜவாஹிரி, எகிப்து இஸ்லாமிய ஜிஹாத், உள்ளிட்டவை முதல் முறையாக கரம் கோர்த்து நடத்திய முதல் தாக்குதல்!
அமெரிக்கா அரண்டது:
பின்லேடன் மிகப் பெரிய மிரட்டலாக உருவெடுத்ததும் இந்தத் தாக்குதலுக்குப் பின்னர்தான். இந்த தாக்குதலுக்குப் பிறகுதான் பின்லேடனை மிகவும் அபாயகரமான தீவிரவாதி என்று அமெரிக்கா அறிவித்தது. அப்படிப்பட்ட நைரோபியில்தான் தற்போது இன்னொரு பயங்கர தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !