இலங்கையில் விரிவான பல தரப்பினருக்கு தனது மொபைல் பாங்கிங் சேவையை விஸ்தரிக்கும் வகையில் கொமர்ஷல் வங்கி அதன் மொபைல் பாங்கிங் சேவையில் நாட்டின் மிகப் பெரிய நடமாடும் வங்கிச் சேவை வலையமைப்பான டயலொக்குடன் கைகோர்த்துள்ளது.
இந்தச் சேவையானது USSD (Unstructured Supplementary Service Data) தொழில்நுட்பம் வழியாக செயற்படுத்தப்படும். GSM தொலைபேசிகள் தமது சேவை வழங்குனரின் கம்பியூட்டருடன் தொடர்புகொள்ள பயன்படுத்தும் தொழில்நுட்பமே இதுவாகும்.
பாவனைக்கு மிகவும் இலகுவான வசதிகளைக் கொண்ட USSD அடிப்படையிலான இந்த மொபைல் பாங்கிங் சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு அளப்பரிய வசதிகளை வழங்குகின்றது.
கணக்கு மீதிகளையும், கிரடிட் கார்ட் மீதிகளையும் தெரிந்து கொள்ளவும், பாவனைக் கட்டண பட்டியல்களை செலுத்தவும், பண மாற்றம், வெளிநாட்டு நாணயக் கணக்கு விவரங்களைத் தெரிந்து கொள்ளல், PIN மாற்றங்கள், நடமாடும் தொலைபேசி றீ லோர்ட், நுண் கூற்றுக்களுக்கான வேண்டுகோள் என பல்வேறு விதமான சேவைகளை இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
USSD தளத்தின் ஊடாக இந்தச் சேவைகள் வழங்கப்படுவதால் சாதாரண ஒரு தொலைபேசி முதல் மிக நவீனமான எந்தவொரு தொலைபேசி வழியாகவும் இந்தச் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு இணையத் தள வசதிகள் கூட தேவையில்லை.
கொமர்ஷல் வங்கியின் ந பாங்கிங் சேவை பிரதம முகாமையாளர் பிரதீப் பந்துவன்ஸ இது பற்றிக் கூறுகையில் ´ USSD அடிப்படையாகக் கொண்ட டயலொக் மூலமான எமது பங்குடைமையானது டயலொக் வலையமைப்பை பாவிக்கும் ஆயிரக்கணக்கான எமது வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை பிரதி பலிப்பதாக அமந்துள்ளது.
இந்தச் சேவையானது மிக விரிவாக பாவனையில் உள்ள ஒன்றாகும். முற்றிலும் பாதுகாப்பானது. புழக்கத்தில் உள்ள மொபைல் பாங்கிங் சேவைகளுள் இதுவே மிகவும் வசதியானதாகும்´ என்றார்.
கொமர்ஷல் வங்கியின் நடமாடும் வங்கிச் சேவை மூலம் வங்கியால் விநியோகிக்கப்பட்டுள்ள கிரடிட் கார்ட்டுகளின் நிலுவைகளைச் செலுத்தலாம். அதேபோல் ஏனைய வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள கார்ட்டுகளின் கொடுப்பனவுகளையும் செலுத்தலாம்.
தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை, LECO என்பனவற்றின் கொடுப்பனவுகளைச் செலுத்தலாம். செலிங்கோ லைஃப், இலங்கை காப்புறுதி (ஆயுள் மற்றும் மோட்டார்) ஜனசக்தி (ஆயுள்), யுனியன் எஷுரன்ஸ், AIA ன்ஷுரன்ஸ், ஏஸியன் எலயன்ஸ், (ஆயுள்), அமானா தகப்புல் (ஆயுள்) கொடுப்பனவுகள், டயலொக் செடிலைட் தொலைக்காட்சி கட்டணங்கள், LBN மற்றும் செட்நெட் தொலைக்காட்சியின் கட்டணங்கள் என்பனவற்றையும் செலுத்த முடியும்.
டயலொக் பாவனையாளர்கள் USSD தளச் சேவையை #8823#ஐ டயல் செய்து பெறலாம். ஒரு வாடிக்கையாளர் இதை டயல் செய்ததும், தேவையான சேவையை தெரிவு செய்து உரிய PIN (தனிப்பட்ட குறியீட்டு) இலக்கத்தை வழங்கி தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த PIN இலக்கத்தை வங்கியில் இருந்து ஏற்கனவே பெற்றிருத்தல் வேண்டும்.
USSD சேவைக்கான கட்டணம் அதன் பாவனையைப் பொறுத்து மிகக் குறைந்த விதத்திலேயே அமையும். புதிய பாவனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 31 டிசம்பர் 2013 வரை செட்அப் கட்டணம் ரத்துச் செய்யப்படும்.
கொமர்ஷல் வங்கியே இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியாகும். உலகில் உள்ள தலைசிறந்த ஆயிரம் வங்கிகளுள் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக இடம் பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியும் இதுவேயாகும்.
232 கம்பியூட்டர் சேவை நிலைய வலையமைப்புக்களுடனும் 574 ATM நிலைய வலையமைப்புடனும் இந்த வங்கி செயற்படுகின்றது. .´குளொபல் பினான்ஸ்´ சஞ்சிகையால் தொடர்ந்து 15 வருடங்களாக இலங்கையின் தலைசிறந்த வங்கியாகவும் இது தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ´த பேங்கர்´, ´பினான்ஸ் ஏஸியா´, ´யூரோமணி´ மற்றும் ´டிரேட் பினான்ஸ்´ சஞ்சிகைகளால் சிறந்த வங்கிக்கான பல விருதுகளையும் வென்றுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !