விதைப் பைக்கு அதிக பாதிப்பை ஏற்ப்படுத்துமாம். மும்பையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில்தான் கிரீஷ் குமார் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார்.
கைத்தொலை பேசியை உடலுக்கு நெருக்கமாக வைப்பது பாதிப்பு தான். அதிலும் விதைப்பை அருகில் அதிக நேரம் வைப்பது அதிகமான பாதிப்பை ஏற்ப்படுத்தும். குறிப்பாக மலட்டுத்தன்மைக்கு வளி வகுக்கும்.
இந்தக் கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடிகை ஜூஹி சாவ்லா உள்ளிட்டோரும் அதில் அடக்கம்.
போன் டவர்களால் புற்றுநோய்:
வீடுகளுக்கு அருகில் மொபைல் போன் டவர்களை வைப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
காபி ஊறுகாய் மாதிரி:
எப்படி அதிகம் காபி சாப்பிட்டால், ஊறுகாய் சாப்பிட்டால் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளதோ அதேபோல கதிர்வீச்சாலும் புற்று நோய் பாதிப்பு அதிகம் வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக கூறினார் கிரீஷ் குமார்.
காது சவ்வு பாதிப்பு:
தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்தால் காது சவ்வு கிழிந்து காது ஓட்டையாகிப் போய் விடுமாம். மேலும் காது நரம்புகளும் பாதிக்கப்பட்டு காது கேக்காதாம்...
மலட்டுத்தன்மை:
தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்தால் மலட்டுத்தன்மையும் வருமாம். குறிப்பாக பேன்ட் பாக்கெட்களில் போனை வைத்திருந்தால் அது ஆண்களின் விதைப் பையை காலி செய்து விடுமாம். இதனால் வெறும் பைதான் இருக்கும்! குழந்தைப் பேறுக்கு குட்பை சொல்லி விட வேண்டியதுதான் என்றும் கருத்தரங்கில் எச்சரிக்கப்பட்டது.
கதிர்வீச்சு நல்லதுதான் ஆனால்:
பாபா அணு ஆய்வுக் கழகத்திலிருந்து வந்திருந்த ஸ்ரீகுமார் பானர்ஜி என்பவர் பேசுகையில் புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு மருந்தாக பயன்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உடலுக்குள் போக வேண்டுமோ அது மீறி விடக் கூடாது. மீறும்போதுதான் ஆபத்து என்றார். இனிமேல் பேன்ட் போடும்போது அதில் பர்ஸை மட்டுமே வையுங்கள். செல்லை வச்சுராதீங்க.
தீர்வு!
*வெளியே செல்லும் நேரங்களைத் தவிர்ந்த ஏனைய நேரங்களில் கைத்தொலைபேசிகளை தள்ளியே வையுங்கள்.
*அதிகமானவர்கள் துங்கும் போதும் தொலைபேசியை அருகிலேயே வைத்து துங்குவார்கள். நீங்கள் துங்கும் 8 மணி நேரமும் உங்களுக்கு கதிர்வீச்சுத் தாக்கம் இருக்கும்.
*அதிகநேரம் பேசவேண்டி உள்ள சந்தர்ப்பங்களில் இயர்போனை (headset) பயன்படுத்துங்கள். இயர்போனை (headset) பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் கைத்தொலைபேசியை கையிலேயே வைத்திருங்கள்.
*வீட்டிலிருக்கும் நேரங்களில் தரை இணைப்பு தொலைபேசிகளை பயன்படுத்துங்கள்.
*நீங்கள் தேவையில்லை என்று கருதும் நேரங்களில் செயற்ப்பாட்டை நிறுத்தி வையுங்கள். (அதற்க்கான சந்தர்ப்பம் கிடைக்குமா?)
*அதிக பாதிப்புக்கள் இல்லையென நீங்கள் கருதினாலும், உங்களுக்கு தெரியாமலே உங்கள் உடலின் ஒரு பகுதி போல கைத்தொலைபேசி உங்களுடன் ஒன்றி விட்டது.
(உங்களுக்குள் நீங்களே சிறிதாக ஒரு கணக்கு போட்டு பார்த்து விடுங்கள் மொபைல் போன் உங்களை விட்டு பிரிந்திருக்கும் நிமிடங்கள் எத்தனை என்று.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !