அணுவில் எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய மூன்று துகள்கள் உண்டு என்பது விஞ்ஞானி ரூதர் போர்டின் கண்டுபிடிப்பு. ஆனால் அந்த அணுவுக்கு அடிப்படை 16 துகள்கள் என்று கண்டறியப்பட்டது.
இந்த 16 துகள்களும்தான் கல், மண், பேனா, பென்சில், விமானம், கார், ரெயில் என அனைத்துப் பொருட்களின் இயக்கத்துக்கும் அடிப்படை எனவும் தெரிய வந்தது.
ஆனால் 17-வது அடிப்படை துகள் என்று ஒன்று உண்டு என கூறி கண்டுபிடித்து அதை உலகுக்கு அறிவித்தவர் இங்கிலாந்து விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் (வயது 84).
அவர் தான் கண்டறிந்த துகளுக்கு ‘போஸான் துகள்’ என பெயரிட்டார். இதை ‘கடவுள் துகள்’ என்றும் ‘கடவுள் இல்லாத துகள்’ என்றும் கூறுவோர் உண்டு.
அணுவின் அடிப்படையான 16 துகள்களுக்கும் நிறை இருப்பதற்கு ஹிக்ஸ் போஸான் தான் காரணம் என்பது பீட்டர் ஹிக்ஸின் வாதம்.
இந்த ஆராய்ச்சியில் பீட்டர் ஹிக்சுக்கு உதவியவர் சக விஞ்ஞானியான பிராங்கோயிஸ் இங்கிலெர்ட் (80) ஆவார். இந்த இருவருக்கும் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !