Headlines News :
Home » » பாலவாக்கத்தில் அதிர்ச்சி: பெண்ணை கடத்தி கழுத்தறுத்து நகைகளை கொள்ளை!

பாலவாக்கத்தில் அதிர்ச்சி: பெண்ணை கடத்தி கழுத்தறுத்து நகைகளை கொள்ளை!

Written By TamilDiscovery on Sunday, September 15, 2013 | 8:58 PM

தமிழகத்தில் சென்னை பாலவாக்கத்தில் பெண்ணை காரில் கடத்திச்சென்று கழுத்தை அறுத்து நகைகளை கொள்ளையடித்த தாய், மகள் உள்பட 3 பேரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

சென்னையை அடுத்த பாலவாக்கம் கந்தசாமி நகரை சேர்ந்தவர் தேன்மொழி (வயது 55). இவர், அந்த பகுதியில் உள்ள பெரியார் சாலையில் மெஸ் நடத்தி வருகிறார்.

இவரது மெஸ்சுக்கு பாலவாக்கம் வி.ஜி.பி. நகரை சேர்ந்த கங்கா (36) என்பவர் அடிக்கடி வந்து சென்றார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கங்காவுக்கு பணம் தேவைப்பட்டது. எனவே தேன்மொழியிடம் கேட்டார். அதற்கு அவர், பணம் இல்லை என கூறினார்.

இதையடுத்து கங்கா, தேன்மொழியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று குடிப்பதற்கு பால் கொடுத்தார். அதை குடித்த தேன்மொழிக்கு மயக்கம் ஏற்பட்டது. பின்னர் கங்காவும், அவரது மகள் கீதாஞ்சலி, வளர்ப்பு மகன் விக்னேஷ் ஆகியோர் மயக்கம் அடைந்த தேன்மொழியை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். பெரியபாளையம் அருகே உள்ள ஜெயபுரம் என்ற பகுதியில் காரை நிறுத்திய அவர்கள், தேன்மொழி அணிந்து இருந்த 15 பவுன் தங்க நகைகளை கழற்றினார்கள்.

பின்னர் தேன்மொழியின் கழுத்தை அறுத்து, காரில் இருந்து அவரை கீழே தள்ளி விட்டு தப்பிச்சென்று விட்டனர். அருகில் இருந்த ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் காவலாளி, பெண்ணின் முணகல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தார்.

அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தேன்மொழி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பொன்னேரி பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் தேன்மொழியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிர்பிழைத்த தேன்மொழி, நடந்த சம்பவங்களை பொலிசாரிடம் கூறினார். இதுபற்றி நீலாங்கரை பொலிசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அடையாறு துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் உமாசங்கர், நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், தாமோதரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் நகை, பணத்துக்காக தேன்மொழியை காரில் கடத்திச் சென்று அவரது கழுத்தை அறுத்து தள்ளிவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து பாலவாக்கத்தில் பதுங்கி இருந்த கங்கா, அவரது மகள் கீதாஞ்சலி, வளர்ப்பு மகன் விக்னேஷ் ஆகிய 3 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template