Headlines News :
Home » » அரசுடன் இணைந்தார் ஆனந்தி? தேர்தல் வன்முறைகளும், களநிலை நிலவரங்களும்!

அரசுடன் இணைந்தார் ஆனந்தி? தேர்தல் வன்முறைகளும், களநிலை நிலவரங்களும்!

Written By TamilDiscovery on Saturday, September 21, 2013 | 3:18 AM

வட, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று மூன்று மாகாணங்களிலும் உள்ள 10 மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது.

10 மாவட்டங்களிலும் அமைக்கபட்டுள்ள 3ஆயிரத்து 712 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் மூன்று மாகாண சபைகளுக்கும் 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 43 இலட்சத்து 58 ஆயிரத்து 261 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 3ஆயிரத்து 785 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

குறிப்பாக வட மாகாணசபைக்கு 36 உறுப்பினர்களை தெரிவு செய்யும் நோக்கில் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் 906 வேட்பாளர்கள் ஐந்து மாவட்டங்களிலும் களத்தில் குதித்துள்ளனர். நாட்டில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வட மாகாண சபைக்கு முதல் தடவையாக தேர்தல் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும்.

இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக சுமார் 40 ஆயிரம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டமைப்பினரது வேன் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு: வரணியில் பதற்றம்:

தென்மராச்சி, வரணி பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பயணித்த வேன் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

வரணி பிரதேசத்தில் புலனாய்வாளர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உறுப்பினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த நபர் வரணி பிரதேசத்திலிருந்து இராணுவ முகாமிற்குள் ஓடியுள்ளார்.

இரண்டு வேன்களில் சென்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தங்களுடைய வேனில் திரும்பும்போது இராணுவத்தினர்கள் அவர்களுடைய வேனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

வேன்களுக்கும் இராணுவ முகாமிற்கும் 100 மீற்றர் தூர இடைவெளியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் சுமார் 15 - 20 துப்பாக்கி வேட்டுக்கள் வேனை நோக்கி சுடப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்த எமது செய்தியாளர் தெரிவித்தார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ள வேனுக்கு முன்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனது வேன் சென்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வேனின் கண்ணாடிகள் உடைந்து வேன் சேதடைந்துள்ளது.

வரணி மகா வித்தியாலய தேர்தல் வாக்குச் சாவடிக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது வாக்குச்சாவடி நோக்கி வரும் வாக்காளர்களை வாக்களிக்க விடாது பொலிஸார் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்துவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தென்மராச்சி, வரணி பிரதேசத்தில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்களிப்பு ஸ்தம்பிதம் அடைந்துள்ள அதேவேளை, அங்கிருந்த கடைககள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கண்டி தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு: நால்வர் காயம்:

கண்டி, பண்வில, கெலபொக்க தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக நால்வர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது வானை நோக்கி துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாத்ததும்பர பிரதேசத்தில் இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் மடோல்கல லைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வென்னப்புவ பொரலஸ்ஸ பிரதேசத்தில் இரண்டு அரசியல் கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் மாரவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாதகல் மக்களுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்-சுரேஷ்:

வலி. வடக்கு மாதகல் பிரதேசத்தில் வாக்களிக்க சென்ற மக்களை இராணுவ புலனாய்வாளர்கள் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்து விட்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் இதுவரை நடைபெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்களில் 95 வீதமானவை இராணுவத்தினராளையே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று கூட இராணுவத்தினர் வாக்களிக்க சென்ற மக்களை வாக்களிக்க செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதுடன் அவர்களை அச்சுறுத்தி உள்ளார்கள்.

இது தொடர்பகாக நாம் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளோம்.

நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை ஈ.பி.டி.பி.யும் இராணுவத்தினரும் சேர்ந்து யாழில் பல பகுதிகளில் மக்களிடம் விநியோகித்து உள்ளார்கள்.

இன்று காலை கூட ஒரு பத்திரிக்கையின் பெயரில் அதேபோலான அநமதய பத்திரிகை ஒன்றை வெளியிட்டு தமிழரசு கட்சி இந்த தேர்தலை புறக்கணிக்கின்றது என செய்தி வெளியிட்டு மக்களை குழப்பி உள்ளனர் என மேலும் தெரிவித்தார்.

எம்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்:

இதேவேளை தனது மற்றும் ஆதரவாளர்களது வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மையில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் வைத்து சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது இனந்தெரியாதாரோல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நாம் அவரிடம் வினாவிய போது இத்தகைய சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென அவர் எமக்கு தெரிவித்தார்.

அரசுடன் இணைந்தார் அனந்தி' என்ற செய்தியுடன் உதயன் பெயரில் பத்திரிக்கை விநியோகம்:

யாழில் வாக்காளர்களை குழப்பும் நோக்குடன் யாழில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிக்கை பெயரில் அநமதேய பத்திரிகை இன்று (21) காலை இனம் தெரியாதவர்களால் யாழ். வீதிகளில் வீசப்பட்டுள்ளது.

"அரசுடன் இணைந்தார் வேட்பாளர் அனந்தி, தேர்தலை புறக்கணிக்கின்றது தமிழரசு கட்சி" என்ற தலைப்பு செய்தியுடன் அந்த பத்திரிகை யாழ். வீதிகளில் வீசப்பட்டுள்ளது.

உதயன் பத்திரிகை மாதிரியே அதே சாயலில் இந்த அநமதய பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிகை நான்கு பக்கங்களை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த உதயன் பத்திரிகை ´உரிமையா? சலுகையா? வரலாற்று முடிவு இன்று´ என்ற தலைப்புடன் வெளியாகி இருந்தது.

இந்த அநமதேய பத்திரிகை தொடர்பில் உதயன் பத்திரிக்கையின் நிர்வாகியும் பாராளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவிக்கையில்,

இந்த அநமதய பத்திரிகைக்கும் எமக்கும் எந்த தொடர்பில்லை எம் பத்திரிக்கையின் பெயரை பயன்படுத்தி மக்களை குழப்பும் நோக்குடன் இந்த பத்திரிக்கையை யாரோ வெளியிட்டு உள்ளார்கள் அது தொடர்பான விசாரணைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.

மலையகத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்:

இன்று இடம்பெற்றுவரும் தேர்தல்களில் மலையக மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நுவரெலிய மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் ஆர்வமாக வாக்களிப்பதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அதேபோல் மலையக அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி. சாந்தினி சந்திரசேகரன் இன்று காலை 8.30 அளவில் தலவாக்கலை வித்தியாசேகர சிறுவர் பாடசாலையில் தனது வாக்கை பதிவு செய்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கே.கே. பியதாஸ ஹட்டன் ஹைலண்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளரும் கால்நடை மற்றும் கிராமிய, வள சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது வாக்கை றம்பொடை வௌன்டன் தமிழ் மகா வித்தியாலயத்தில் பதிவு செய்தார்.

நண்பகல் 12 மணிவரை முல்லைத்தீவில் அதிகபடியாக 50% வாக்கு பதிவு:

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் இன்று மதியம் 12.00 மணிவரையான வாக்குப் பதிவுகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகபடியாக 50 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் 42 வீத வாக்குகளும், நுவரெலிய மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 35 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன் வடக்கில், கிளிநொச்சி மாவட்டத்தில் 29 வீத வாக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 24 வீத வாக்குகளும், மன்னார் மாவட்டத்தில், 30 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகபடியாக 50 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அம் மாவட்ட அரசாங்க அதிபர் அத தெரணவிடம் தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தில் குறுநாகல் மாவட்டத்தில் 27 வீத வாக்குகளும், புத்தளம் மாவட்டத்தில் 20 வீத வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

யாழில் மாற்றுத்திறனாளிகள் சென்ற பஸ் ஆயுதம் தரித்த குழுவினால் இடைமறித்து தாக்குதல்:

யாழ். தென்மராச்சி பிரதேசத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளை வாக்களிப்பிற்காக ஏற்றிச் சென்ற பஸ்ஸை முகமூடியணிந்த இந்தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் இடைமறித்து அதன் சாரதியை தாக்கியுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளை வாக்களிப்பதற்காக கபே அமைப்பு விசேட பஸ் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இந்த பஸ்ஸை சாவகச்சேரி, காளி கோவிலடி பிரதேசத்தில் வழிமறிந்த இனந்தெரியாத நபர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதோடு பஸ்ஸின் சாரதியையும் தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பஸ்ஸின் சாரதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுள்ளார்.

இதேவேளை மாவட்டபுரம், கொல்லன்கலட்டி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்கள் மக்களை அச்சுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இது தொடர்பில் அங்கிருந்த பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கூட்டமைப்பினரது வேன் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு: வரணியில் பதற்றம்:

தென்மராச்சி, வரணி பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பயணித்த வேன் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

வரணி பிரதேசத்தில் புலனாய்வாளர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உறுப்பினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த நபர் வரணி பிரதேசத்திலிருந்து இராணுவ முகாமிற்குள் ஓடியுள்ளார்.

இரண்டு வேன்களில் சென்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தங்களுடைய வேனில் திரும்பும்போது இராணுவத்தினர்கள் அவர்களுடைய வேனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
வேன்களுக்கும் இராணுவ முகாமிற்கும் 100 மீற்றர் தூர இடைவெளியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் சுமார் 15 - 20 துப்பாக்கி வேட்டுக்கள் வேனை நோக்கி சுடப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்த எமது செய்தியாளர் தெரிவித்தார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ள வேனுக்கு முன்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனது வேன் சென்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வேனின் கண்ணாடிகள் உடைந்து வேன் சேதடைந்துள்ளது.

வரணி மகா வித்தியாலய தேர்தல் வாக்குச் சாவடிக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது வாக்குச்சாவடி நோக்கி வரும் வாக்காளர்களை வாக்களிக்க விடாது பொலிஸார் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்துவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தென்மராச்சி, வரணி பிரதேசத்தில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்களிப்பு ஸ்தம்பிதம் அடைந்துள்ள அதேவேளை, அங்கிருந்த கடைககள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

வடக்கில் 1.00 மணிவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்:

வடமாகாண தேர்தல்களில் இன்று பகல் 1.00 மணிவரையான வாக்குப் பதிவுகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி கிளிநொச்சியில் 40 வீத வாக்குகளும், முல்லைத்தீவில் 50 வீத வாக்குகளும், மன்னாரில் 35 வீத வாக்குகளும், வவுனியாவில் 40 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மன்னாரில் பல்வேறு தடைகளையும் தாண்டி மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு:

வடமாகாண சபை தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் மன்னார் மாவட்டத்தில் சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மன்னாரில் 75 ஆயிரத்து 737 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

5 வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக 12 கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக்குழுக்களைச் சேர்ந்த 160 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இன்று காலை 7 மணி முதல் நண்பகல் வரை 30 வீதமான வாக்குகள் பாதிவாகியுள்ளது. இதே சபையம் அரச தரப்பு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

மாவட்டத்தில் பல இடங்களுக்கு வாக்களர்களை ஏற்றி வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களுக்கு இறக்கி விடுவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்;த தனியார் போக்குவரத்து சேவைகள் பலவற்றை பொலிஸார் தலையிட்டு நிறுத்த முயற்சி செய்து வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வாக்களித்த இருவர் கைதாகி விடுதலை:

மன்னாரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துவிட்டு வெளியில் வந்து நண்பர்களுடன் உரையாடிகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இருவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் கருங்கண்டல் ம.வி பாடசாலையின் அதிபரான அருட்சகோதரர் செபஸ்தியாம் பிள்ளை கிறிஸ்ரி விஜயதாசன் , ஆசிரியை ஜோதினி குரூஸ் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு  மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு விட்டு வெளியில் வந்து நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போதே இவ்விருவரும்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டே கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

போலி வாக்காளர் அட்டைகளுடன் ஐவர் கைது:

ஆனமடுவ தலகஸ்வௌ வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் போலி வாக்காளர் அட்டைகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடியில் துப்பாக்கி வெடிப்பு:

வட மாகாண சபைக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல் கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கனகராயன் குள்ம் சின்னரம்பன் பாரதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கியொன்றே தவறுதலாக வெடித்துள்ளது. அங்கு வாக்களிப்பதற்கு வருகைதந்திருந்த 24 வயதான நா.தவராசா என்பவறே காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சன்னம் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பட்டே அவரது காலில் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாக்களிப்பு நிலையத்தின் முன் நடமாடிய சந்தேக நபரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்த மாவை:

தெல்லிப்பளை, கொல்லங்கட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சைவ தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியின் முன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞனொருவரை பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்நபரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவது:

தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெல்லிப்பளை, கொல்லங்கட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சைவ தமிழ் கலவன் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

இதன்போது அப்பகுதியில் இளைஞரொருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடி வருவதை மாவை சேனாதிராஜா அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அவர் குறித்த இளைஞனிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு அவ்விளைஞன் மறுப்புத் தெரிவித்ததையடுத்து அந்நபரை அவர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template