
ஆனால் இதை சிலர் துஷ்பிரயோகம் செய்து பொலிஸ் அதிகாரிகளை அலைக்கழிக்கும் சம்பவம் நடக்கின்றன. இங்கிலாந்து நாட்டிலும் பொலிசார் இந்த தொல்லையில் சிக்கி தவிக்கிறார்கள்.
சமீபத்தில் மான்செஸ்டர் நகரில் ஒரு நபர் அவசர பொலிஸ் உதவியை நாடினார். அதிகாரிகள் உடனடியாக அவர் அழைத்த மதுபான விடுதிக்கு விரைந்தனர்.
அங்கு நடந்த தகராறு என்ன? என்று விசாரித்த போது, ‘பீர் பாட்டில் அடைப்பான் (கார்க்) சரியில்லை. எனவே பணத்தை திரும்ப கேட்டால் தர மறுக்கிறார்கள்’ என்று அந்த நபர் பொலிசாரிடம் புகார் தெரிவித்தார்.
அவரை பொலிசார் கடுமையாக கண்டித்ததுடன், எச்சரிக்கை நோட்டீசு வழங்கி விட்டு திரும்பினார்கள்.
இந்த நிகழ்வு பற்றி பொலிஸ் அதிகாரி பிலிப் குறிப்பிடுகையில், ‘இது போன்று ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் சராசரி 3,571 தேவையற்ற அழைப்புகள் வந்தன. ஒரு பெண் வீட்டு தொட்டியில் புழுக்கள் இருக்கிறது என்கிறார், இன்னொருவர் போன் செய்து என்னுடைய கார் நிறுத்து இடம் திருட்டு போய் விட்டது என்கிறார்.
இந்த சர்வசாதாரண விஷயத்துக்கு எல்லாம் பொலிசாரை அழைப்பதை தவிர்க்க வேண்டும்’ என்று வருத்தத்துடன் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !