பிரதமர் மன்மோகன் சிங்கை கிரைம் மினிஸ்டர் என்று அணு சக்திக்கு எதிரான இயக்கம் வர்ணித்துள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று வரும் இந்த இயக்கம் பிரதமரை கடுமையாக விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மக்களின் அணு பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் தவறி விட்டார் என்றும் இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் அமெரிக்க நிறுவனங்கள் தங்களது மெகா அணு உலைத் திட்டத்தை குஜராத்தில் நிறுவவும் அவர் துணை போய் வருகிறார் என்றும் அது கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை
அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமாக:
அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமாக பிரதமர் நடந்து வருகிறார். இதற்காகவே நீர்த்துப் போன அணு விபத்து இழப்பீடு சட்டத்தையும் அவர் கொண்டு வந்துள்ளார்.
ஈசியாக தப்பி விடலாம்:
இதன் மூலம் அணு விபத்து ஏதேனும் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் எளிதில் தப்பி விட முடியும். போபாலில் விஷ வாயுக் கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனர் வாரன் ஆண்டர்சன் தப்பியது போல.
இது பிரிவினைச் சட்டம்:
இந்த சட்டம்தான் உண்மையில் பிரிவினைவாத சட்டமாகும்.
அவநம்பிக்கைக்குரிய பிரதமர்:
பிரதமர் மன்மோகன் சிங் செயல்படாதவராக இருக்கிறார். அவ நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். பதவிக்காலம் முடியப் போகும் இந்த சமயத்திலாவது அவர் உறுதியான முடிவுகளை எடுக்க முயற்சிக்க வேண்டும். நல்ல திட்டங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். தனது அமெரிக்க பயணத்தை அவர் ஒட்டுமொத்தமகா ரத்து செய்ய வேண்டும்.அடுத்த அரசு அமையும் வரை அணு சக்தி தொடர்பான திட்டங்களை நிறுத்த வேண்டும்.
யாருக்கு இவர் பிரதமர்:
இவர் இந்தியாவுக்குப் பிரதமரா அல்லது அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற பிறநாடுகளுக்கும், அவற்றின் நிறுவனங்களுக்கும் பிரதமரா.. என்று அந்த அறிக்கை கேட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !